சீட் கேட்கும் காமெடி செந்தில், ஆனந்தராஜ்
சென்னை:
அதிமுகவில் சேர்ந்து தேர்தல் பிரசாரத்தில் குதித்துள்ள நடிகர் செந்தில், கடலாடி தொகுதியில் போட்டியிட சீட் கோரி விண்ணப்பம்அளித்துள்ளார்.
அதிமுக சார்பில் தேர்தலில் போட்டியிட சீட் கேட்டு ஏராளமானோர் தொடர்ந்து விண்ணப்பம் அளித்து வருகின்றனர். தினசரிஆயிரக்கணக்கானோர் விண்ணப்பம் அளித்து வருவதால் அதிமுக தலைமைக் கழகம் தொண்டர்கள் கூட்டத்தால் திணறிவருகிறது.சனிக்கிழமை வரை சீட் கேட்டு விண்ணப்ப மனு கொடுத்தவர்களின் எண்ணிக்கை 10,000த்தைத் தாண்டி விட்டது. கடந்த சிலநாட்களாக தினசரி குறைந்தது 2,000 பேர் வரை விண்ணப்பங்களைக் கொடுத்து வருகின்றனர்.
இதுவரை கவுண்டமணியிடம் அடிபட்டு வந்த நான், இனிமேல் திமுக கூட்டணியை உதைக்கப் போகிறேன் என்ற உதார்வசனத்தோடு, அதிமுக மேடைகளைக் கலக்க ஆரம்பித்துள்ள காமெடியன் செந்திலும் சீட் கேட்டுள்ளார்.
அதிமுகவில் சேர்ந்த கையோடு பொதுக்கூட்டங்களில் பங்கேற்க ஆரம்பித்துள்ள செந்தில், அம்மா விருப்பப்பட்டு சீட் கொடுத்தால்கடலாடி தொகுதியில் போட்டியிடுவேன் என்று கூறியிருந்தார். தற்போது கடலாடி தொகுதியில் சீட் கேட்டு விண்ணப்பம்அளித்துள்ளார்.
அதேபோல சமீபத்தில் கட்சியில் சேர்ந்த நடிகர் விஜயக்குமார் அதிமுக தலைமைக் கழகத்திற்கு வந்து சிறிது நேரம் அமர்ந்துவிட்டுச் சென்றார்.
செந்தில், விஜயக்குமாருக்கு முன்பாக அதிமுகவில் இணைந்த நடிகர் ஆனந்தராஜ் புதுவை மாநிலம் உருளையன்பேட்டைதொகுதியில் போட்டியிட சீட் கேட்டு விண்ணப்பம் அளித்துள்ளார்.
இவர்கள் தவிர அமைச்சர்கள் கே.பி.அன்பழகன் பாலக்கோடு தொகுதியில் போட்டியிடவும், சி.வி.சண்முகம் திண்டிவனம்தொகுதியில் போட்டியிடவும், இன்பத் தமிழன் ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் போட்டியிடவும் மீண்டும் சீட் கேட்டு விண்ணப்பம்அளித்தனர்.
முன்னாள் அமைச்சரும், வயதான காலத்தில் ஜெயலலிதாவின் வேனில் தொற்றிக் கொண்டு பயணம் செய்து அசத்தியவருமான,மறைந்த எஸ்.டி.சோமசுந்தரத்தின் மகன் செல்வம், பட்டுக்கோட்டை தொகுதியைக் கேட்டு விண்ணப்பம் அளித்தார்.
அம்மாவுக்கு சீட் கேட்டு 2,500 மனு:
இதற்கிடையே முதல்வர் ஜெயலலிதாவை ஆண்டிப்பட்டி உள்ளிட்ட பல்வேறு தொகுதிகளில் போட்டியிடக் கோரி இதுவரை2,500 பேர் விண்ணப்பம் அளித்துள்ளனர்.
ஆண்டிப்பட்டி, சோழவந்தான், மருங்காபுரி ஆகிய தொகுதிகளில் போட்டியிடக் கோரித்தான் அதிக அளவில் விண்ணப்பங்கள்வந்துள்ளன.
நடிகரும், சைதாப்பேட்டை தொகுதியின் தற்போதைய உறுப்பினருமான ராதாரவி, சேப்பாக்கம் மற்றும் ஆயிரம் விளக்குதொகுதிகளில் போட்டியிட சீட் கோரி விண்ணப்பம் வழங்கியுள்ளார்.
சேப்பாக்கம் தொகுதியில் கருணாநிதியும், ஆயிரம் விளக்கு தொகுதியில் ஸ்டாலினும் போட்டியிடத் திட்டமிட்டுள்ளனர் என்பதுகுறிப்பிடத்தக்கது. அவர்களை தோற்கடித்துக் காட்டுவாராம் ராதாரவி.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications