அதிமுகவில் பழ. கருப்பையா, லியாகத் அலி கான்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
திரைப்படத் தயாரிப்பாளர், கட்டுரையாளர், சிறந்த பேச்சாளர் என பன்முகத் திறமை கொண்ட பழ. கருப்பையா இன்று திடீரென அதிமுகவில் சேர்ந்தார்.
முன்பு காங்கிரஸ் கட்சியில் இருந்தவர் பழ. கருப்பையா. ஆனால், கருப்பையாவின் திறமையை காங்கிரஸ் சரியாக பயன்படுத்தவில்லை. அவருக்கு உரிய மரியாதையும் தரவில்லை. இதனால் விரக்தியில் இருந்து வந்தார்.இந் நிலையில் பழ. கருப்பையா இன்று முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து அதிமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார்.
இதேபோல, விஜயகாந்த்தின் முன்னாள் நெருங்கிய நண்பரும், திரைப்பட வசனகர்த்தா, மற்றும் இயக்குனராக லியாகத் அலி கானும் இன்று ஜெயலலிதாவை சந்தித்து அதிமுகவில் இணைந்தார்.
விஜயகாந்த்தின் பல படங்களுக்கு அனல் பறக்கும் வசனங்களைத் தீட்டியவர் லியாகத் அலி கான் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால், தனது மச்சான் சுதீஷை பினாமியாகப் போட்டு படம் தயாரிக்க ஆரம்பித்ததில் இருந்து முன்பு கை கொடுத்து உதவிய, பழைய நண்பர்களாக இப்ராகிம் ராவுத்தர், லியாகத் போன்றவர்களை கேப்டன் வெட்டிவிட்டுவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications