இந்தியாவின் அதிவேக ரயில் இயக்கம்
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
இந்தியாவின் அதிவேகமான ரயிலான டெல்லி-போபால் சதாப்தி எக்ஸ்பிரஸ் இன்று முதல் இயங்கத் தொடங்கியது.மணிக்கு 150 கி.மீ. வேகத்தில் செல்லும் இந்த ரயிலை ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் இன்று டெல்லியில் கொடியசைத்துஇயக்கி வைத்தார். இந்த ரயில் டெல்லியில் இருந்து ஆக்ரா வரை 150 கி.மீ. வேகத்தில் செல்லும். பின்னர் வேகம்மட்டுப்படுத்தப்படும். இதுவரை இந்த ரயில் 120 கி.மீ. வேகத்தில் இயங்கி வந்தது.
இந்த வேக அதிகரிப்பு காரணமாக டெல்லி-ஆக்ரா இடையிலான பயண நேரம் சுமார் அரை மணி நேரம வரை குறையும்.
இன்று இந்த ரயில் இயக்கி வைக்கப்பட்டபோது ரயில்வே இணையமைச்சர் வேலுவும் உடனிருந்தார்.












Click it and Unblock the Notifications