திண்டிவனம் நீக்கம்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

Dindivanam Ramamurthy

காங்கிரஸ் கட்சியின் கொள்கை, கோட்பாடுகளுக்கு விரோதமாக நடந்து கொண்ட மூத்த காங்கிரஸ் தலைவர்திண்டிவனம் ராமமூர்த்தி கட்சியிலிருந்து 6 ஆண்டுகளுக்கு நீக்கப்படுவதாக காங்கிரஸ் மேலிடம் அறிவித்துள்ளது.

வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்த திண்டிவனம் ராமமூர்த்தி, சமீப காலமாக திமுக தலைவர் கருணாநிதி, மத்தியஇணை அணைச்சர் ஜி.கே.வாசன் ஆகியோரை மிகக் கடுமையாக விமர்சித்து வந்தார்.

வன்னியர்கள் கட்சியில் புறக்கணிக்கப்படுகிறார்கள், இதற்கு கருணாநிதிதான் காரணம். வரும் சட்டசபைத்தேர்தலில் காங்கிரஸுக்கு அதிக இடங்கள் ஒதுக்க வேண்டும், துணை முதல்வர் பதவி தர வேண்டும், ஆட்சியிலும்பங்கு வேண்டும் என்று அடுக்கடுக்காக கோரி வந்தார்.

அவரது பேச்சுக்கள் திமுகவினர் மத்தியில் பெரும்கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இருந்தாலும் திண்டிவனத்திற்குஎதிராக கிளம்பினால் அது வன்னியர்களிடையே திமுகவுக்கு கெட்ட பெயரை ஏற்படுத்தி விடும் என்ற தேர்தல்பயத்தால் திமுக பெருத்த அமைதி காத்தது. அதேபோல வாசனும் வாய் மூடி கம்மென்று இருந்து வந்தார்.

ஆனால் திண்டிவனம் ராமமூர்த்தி திடீரென ஜெயலலிதாவைப் போய்ப் பார்த்தார். இது காங்கிரஸ் கட்சியினருக்குபெரும் அதிர்ச்சியைக் கொடுத்தது. இனிமேலும் அமைதியாக இருந்தால் அது சரிப்படாது என்று உணர்ந்தகாங்கிரஸ் மேலிடம் நடவடிக்கையில் இறங்கியது.

வன்னியரான முன்னாள் எம்.பி. கிருஷ்ணசாமியை தமிழக காங்கிரஸ் தலைவராக நியமித்தது. அதைத் தொடர்ந்துதற்போது திண்டிவனம் ராமமூர்த்தியை கட்சியை விட்டு நீக்கியுள்ளனர். இதுதொடர்பாக காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் ஜெயந்தி நடராஜன் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் காரியக் கமிட்டிக் குழு உறுப்பினர் திண்டிவனம் ராமமூர்த்தி சமீபகாலமாககட்சி விரோத நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தார்.

கட்சிக்கு விரோதமான கருத்துக்களைக் கொண்ட அவரது அறிக்கைகள் வராத நாளே கிடையாது எனும் அளவுக்குதினசரி கட்சியையும், கட்சித் தலைமையையும் அவர் விமர்சித்து வந்தார். தமிழக காங்கிரஸ் பொறுப்பாளரானவீரப்ப மொய்லி இதுதொடர்பாக திண்டிவனம் ராமமூர்த்திக்கு பல அறிவுரைகளைக் கூறியும் கூட தனது போக்கைஅவர் மாற்றிக் கொள்ளவில்லை.

இதைத் தொடர்ந்து கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் 6ஆண்டுகளுக்கு திண்டிவனம் ராமமூர்த்தி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார் என்றார் ஜெயந்தி நடராஜன்.

விரைவில் புதுக் கட்சி - ஜெ.வுடன் கூட்டணி

தன்னை கட்சியிலிருந்து நீக்கியது குறித்து கவலைப்படப் போவதில்லை. விரைவில் புதிய கட்சியைத்தொடங்கவுள்ளேன். அதிமுகவுடன் கூட்டணி அமைத்து சட்டசபைத் தேர்தலை சந்திப்பேன் என்று திண்டிவனம்ராமமூர்த்தி கூறியுள்ளார்.

கட்சியிலிருந்து நீக்கப்பட்டது குறித்து திண்டிவனம் ராமமூர்த்தியிடம் பேசியபோது,

அப்படியா கட்சியிலிருந்து நீக்கி விட்டார்களா.? ரொம்ப சந்தோஷம். இந்த செய்தி எனக்கு மிகவும் மகிழ்ச்சியைத்தருகிறது. 45 வருடங்களாக கட்சிக்காக உழைத்துள்ளேன். பெருந்தலைவர் காமராஜரால் வளர்க்கப்பட்டவன் நான்.

கட்சியை தமிழ்நாட்டில் அவமானத்துக்கும், அடிமைத்தனத்துக்கும் ஆளாக்குகிற கூட்டத்தில் நான் இருக்கமாட்டேன் என்பதை உணர்ந்து, என்னை நீக்கியுள்ளார்கள்.

ஒரு வன்னியரை வைத்து இன்னொரு வன்னியரை கேவலப்படுத்த முடியும் என்று ஜி.கே.வாசன் வழிஏற்படுத்தியுள்ளார். மகிழ்ச்சி அடைகிறேன்.

இனி தமிழக காங்கிரஸ் கட்சிக்கு, திமுகவுக்கு சவாரி சுமக்க ஒரு நொண்டிக் குதிரைதான் கிடைக்கும்.

நானும், எனது ஆதரவாளர்களும் கூடி ஆலோசித்து, பெருந்தலைவர் காமராஜர், அன்னை இந்திரா ஆகியோரின்கனவுகளை நிறைவேற்ற புதிய கட்சியைத் தொடங்குவோம். சட்டசபைத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணிஅமைத்துப் போட்டியிடுவோம்.

கட்சியின் பெயர், கொடி போன்ற விவரங்கள் ஓரிரு நாட்களில் தெரிய வரும். வன்னியர் சதாயத்தைச் சேர்ந்தகட்சியினர் மட்டுமின்றி உண்மையான காங்கிரஸ்காரர்கள் அனைவரும் என்னுடன் அணி வகுப்பார்கள். (இதுநாள்வரை காங்கிரஸ் கட்சியில் வன்னியர்கள் புறக்கணிப்படுவதாக மட்டுமே குரல் கொடுத்தார் இவர் என்பதுகுறிப்பிடத்தக்கது, இப்போது இவரை எல்லோரும் ஆதரிக்க வேண்டும் என்கிறார்)

45 ஆண்டு கால அனுபவம் வாய்ந்த என்னை, 10 வருடம் கூட காங்கிரஸில் காலம் தள்ளாத ஒரு தலைமை(சோனியாகாந்தி) கட்சியிலிருந்து நீக்கியுள்ளது. சோனியா காந்தியின் தலைமையில் ஏற்கனவே காங்கிரஸ் கட்சிபல மாநிலங்களில் அழிந்து போய் விட்டது. இப்போது தமிழகத்திலும் காங்கிரஸை காலி செய்ய சோனியாமுடிவெடுத்து விட்டார் போலும்.

சீக்கிரமே என்னை நீக்கியிருக்க வேண்டும், சற்று தாமதம் செய்து விட்டார்கள். பரவாயில்லை, இதை சந்தோஷமாகஏற்றுக் கொள்கிறேன் என்றார் திண்டிவனம் ராமமூர்த்தி.

திமுகவிடம் எதிர்பார்த்தது மாதிரியே அதிமுகவுடன் கூட்டணி அமைக்கும்போது துணை முதல்வர் பதவியைதிண்டிவனம் டிமாண்ட் செய்து பெறுவாரா? ஜெயலலிதாவிடம் அந்த டிமாண்டை வைக்கும் அரசியல்தைரியமாவது திண்டிவனத்துக்கு இருக்கிறதா என்பதைப் பார்ப்போம்.

பாமகவுக்கு வலை வீசி தோற்றுப் போன அதிமுக, அடுத்ததாக வைகோவையும் தனது பிடியில் கொண்டு வருவதில்அதிக நம்பிக்கையுடன் இல்லை. இதனால் காங்கிரஸை உடைக்கும் வேலைகளில் இறங்கியது. அதில் சக்ஸஸ்கிடைத்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+