அதிமுக ஆபிஸ் எதிரில் குடியேறிய சிவனாண்டி!!
சென்னை:
![]() |
| அதிமுக அலுவலகம் |
அதிமுக தலைவர் போல செயல்பட்டு வருவதாக எதிர்க் கட்சியினரால் குற்றம் சாட்டப்பட்டு வரும் உளவுப் பிரிவுஐஜியான சிவனாண்டி தனது வீட்டை அதிமுக கட்சி அலுவலகத்துக்கு எதிராக உள்ள அபார்ட்மெண்ட்டுக்குமாற்றிக் கொண்டுவிட்டார்.
எதிர்க் கட்சி கூட்டணி குறித்த வதந்திகள், புரளிகள் இவர் மூலமாகவே பத்திரிக்கைகளுக்குப்பரப்பப்படுவதாகவும், பாமக எம்எல்ஏக்களை கட்சி விலக வைத்ததிலும், காங்கிரஸை உடைத்ததிலும்,
சமீபத்தில் அதிமுகவுக்கு சாதகமான சர்வே முடிவுகள் வெளியானதிலும் இவரது கை வரிசை இருப்பதாகவும் பாமகநேரடியாகவே குற்றம் சாட்டியுள்ளது. இப்போது வைகோ அசைன்மெண்டையும் இவரே கவனித்து வருவதாகவும்திமுக கூட்டணி சார்பில் குற்றம் சாட்டப்பட்டு வருகிறது.
சசிகலா சமூகத்தைச் சேர்ந்த இவர் கடந்த அதிமுக ஆட்சியில் மதுரையில் முக்கிய பொறுப்பில் இருந்தார். பின்னர்அழகிரிக்கு நெருக்கமானதாகக் கூறப்பட்டது. இதையடுத்து இந்த முறை அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் இவரைஒதுக்கி வைத்தது. கோவை ஆயுதப்படைத் தலைவராக அதிகாரம் இல்லாத பதவியில் வைக்கப்பட்டார்.
ஆனால், பிடிக்க வேண்டியவர்களைப் பிடித்து மீண்டும் முக்கிய பதவியைப் பிடிக்க முயன்றார். அவரது முயற்சிசமீபத்தில் வென்றது. க்யூ பிராஞ்ச் எஸ்பியாக நியமிக்கப்பட்டு சென்னைக்கு மாற்றலான சிவனாண்டி அடுத்த இருவாரங்களிலேயே எஸ்பிசிஐடி எஸ்பியாக பதவி உயர்த்தப்பட்டார்.
இதையடுத்து எஸ்பிசிஐடி டிஐஜியாக திடீரென பதவி உயர்வு பெற்றார்.
![]() |
| சிவனாண்டி குடிபுகுந்துள்ள அபார்ட்மெண்ட் |
இவருக்கு எதிர்க் கட்சிக் கூட்டணியை உடைப்பது என்ற முக்கியமான அசைண்மெண்ட்டை முதல்வர் ஜெயலலிதாதந்திருப்பதாக அப்போதே திமுகவினர் மத்தியினர் பேச்சப்பட்டது.
டிஐஜியாக பதவி உயர்வு பெற்றாலும் தனது எஸ்பி பதவியையும் சிவனாண்டி விடாமல் இருந்தார். அதற்குக்காரணமாகக் கூறப்படுவது என்னவெனில், எஸ்பிசிஐடி எஸ்பி பதவியில் இருக்கும் அதிகாரிக்குத் தான்போன்களை ஒட்டுக் கேட்கும் அதிகாரம் உண்டாம்.
போன்களை ஒட்டுக் கேட்கும் பிரிவுன் பொறுப்பு அதிகாரி எஸ்பிசிஐடி எஸ்பிதான் மேலும் உளவுப் பிரிவினர்தங்களது ஆபரேசன்களுக்காக செலவிடும் பணத்தைக் கையாளும் அதிகாரமும் எஸ்பிக்கே உண்டு. இதனாலேயேடிஐஜி ஆனாலும் கூட எஸ்பி பதவியை விடாமல் வைத்திருக்கிறார் சிவனாண்டி என்று கூறப்பட்டது.
கிட்டத்தட்ட அதிமுக தலைவர்களில் ஒருவராகவே செயல்படுவதாக திமுக தலைவர் கருணாநிதியும் பாமக நிறுவனர்ராமதாசும் மறைமுகமாக பலமுறை குற்றம் சாட்டிய சிவனாண்டி இப்போது திடீரென இன்னொரு அதிரடியையும்செய்துள்ளார்.
இதுவரை அண்ணாநகரில் குடியிருந்து வந்த சிவனாண்டி இரு நாட்களுக்கு முன் திடீரென ராயப்பேட்டைலாயிட்ஸ் ரோட்டில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தின் எதிரே உள்ள எஸ்ட்லே அபார்ட்மெண்டில்குடியேறியுள்ளார்.
மூன்று பெட்ரூம் வீட்டை வாடகைக்குப் பிடித்து அதில் குடியேறியுள்ளாராம் சிவனாண்டி.
தேர்தல் நேரத்தில் நிறைய வேலைகள் இருப்பதால் அவர் இங்கு குடிபுகுந்துள்ளதாக திமுகவினர் குற்றம்சாட்டுகின்றனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?














Click it and Unblock the Notifications