அதிமுக சீட்: விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்
சென்னை:
அதிமுக சார்பில் சட்டசபைத் தேர்தலில் போட்டியிட விண்ணப்பம் கொடுக்க ஞாயிற்றுக்கிழமை இரவு 8 மணியுடன்அவகாசம் முடிவதால் ஆயிரக்கணக்கானோர் நீண்ட வரிசையில் காத்திருந்து விண்ணப்பங்களைக் கொடுத்தவருகின்றனர்.
கடந்த 1ம் தேதி முதல் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோரிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டுவருகின்றன. அதிக அளவில் விண்ணப்பங்கள் குவிந்ததால் விண்ணப்பம் தருவதற்கான காலக் கெடு 15ம்தேதியிலிருந்து 19ம் தேதியாக நீட்டிக்கப்பட்டது.கால அவகாசம் நீடிக்கப்பட்டதும் அதிக அளவிலான அதிமுகவினர் விண்ணப்பங்களைக் கொடுத்து வருகின்றனர்.ஜெயலலிதா சார்பில் விண்ணப்பம் அளித்தோரின் எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டி விட்டது.
இந்த நிலையில் கடைசி நாளான இன்று ஆயிரக்கணக்கானோர் நீண்ட வரிசையில் நின்று விண்ணப்பங்களைக்கொடுத்து வருகின்றனர். 13 கவுண்டர்கள் அமைத்து விண்ணப்பங்களை அதிமுக நிர்வாகிகள் பெற்று வருகின்றனர்.
பிற்பகல் வரை 13,500 விண்ணப்பங்கள் வந்துள்ளன. இரவுக்குள் இது 14,000மாக உயர்ந்து விடும் எனத்தெரிகிறது.
234 தொகுதிகளுக்கும் அதிமுக சார்பில் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. விண்ணப்பம் செய்வோர் ரூ. 10,000கட்டணம் செலுத்தியுள்ளனர். அதிமுக போட்டியிடும் தொகுதிகள் தவிர கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்படும்தொகுதிகளுக்குப் போட்டியிட விண்ணப்பம் செய்தவர்களுக்கு இந்தக் கட்டணம் திருப்பித் தரப்பட மாட்டாதுஎன்பது குறிப்பிடத்தக்கது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications