கோழிகள் நுழைய தடை! கறி விலை படுவீழ்ச்சி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

பறவைக் காய்ச்சல் பீதி காரணமாக பிற மாநிலங்களிலிருந்து கோழிகள் கொண்டு வருவதற்கு தமிழக அரசு தடைவிதித்துள்ளது. பறவைக் காய்ச்சல் காரணமாக தமிழகத்தில் கோழிக்கறி கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது.

மகாராஷ்டிர மாநிலத்தின் இரு மாவட்டங்களில் பறவைக் காய்ச்சல் தாக்கியுள்ளது. இதனால் 50,000க்கும்மேற்பட்ட கோழிகள் இறந்துள்ளன, குஜராத்தில் ஒருவர் உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து இரு மாநிலங்களிலும்கோழிகளை கொல்ல உத்தரவிடப்பட்டுள்ளது.

பறவைக் காய்ச்சல் பீதி காரணமாக, தமிழக கோழிகளை வாங்க கேரள அரசும், மகாராஷ்டிர கோழிகளை வாங்ககர்நாடக அரசும் தடை விதித்துள்ளன. இந்த நிலையில் பிற மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்குள் கோழிகளைக்கொண்டு வர தமிழக அரசும் தடை விதித்துள்ளது.

கோழிகள், முட்டைகள், வாத்துகளை எடுத்து வர அரசு தடை விதித்துள்ளது. இதைத் தொடர்ந்து தமிழக எல்லைப்பகுதிகளான ஓசூர், செருக்காடு, தாளவாடி, கவரப்பேட்டை ஆகிய இடங்களில் சோதனைச் சாவடிகள்அமைக்கப்பட்டுள்ளன. இந்தப் பகுதிகள் வழியாக தமிழகத்திற்குள் நுழையும் அனைத்து வாகனங்களும் தீவிரமாகசோதனையிடப்படுகின்றன.

மேலும் மாநிலத்திற்குள் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு கோழிகளை எடுத்துச் செல்லும்போது, தடுப்புமருந்துகளை தெளித்து பின்னர் எடுத்துச் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, தமிழகத்தில் கோழிக்கறியின் விலை கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. பறவைக் காய்ச்சல்தாக்குதலுக்கு முன்பு கிலோ ரூ. 60 வரை விற்கப்பட்டு வந்த கோழிக்கறி தற்போது ரூ. 30 ஆக குறைந்துள்ளது.விலையைக் குறைத்தும் கூட, கோழிக்கறியை வாங்க பொதுமக்கள் தயக்கம் காட்டுகின்றனர். கோழிக்கறிக்குப்பதில் மீன், ஆட்டுக்கறி வாங்க ஆர்வம் காட்டினர்.

பறவைக் காய்ச்சல் பீதி காரணமாக வியாபாரத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கோழிக்கறி வியாபாரிகள்தெரிவித்துள்ளனர்.

உஷார் நிலையில் நாமக்கல்: கோழிகள் மற்றும் முட்டைகளின் தலைநகரமான நாமக்கல் மாவட்டத்தில் பறவைக்காய்ச்சல் பரவாமல் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

நாமக்கல் மண்டலத்தில்தான் அதிக அளவில் முட்டை மற்றும் கோழி உற்பத்தி உள்ளது. சேலம், ஈரோடு, நாமக்கல்,கோவை ஆகிய பகுதிகளிலிருந்துதான் தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களுக்கு அதிக அளவில் கோழிகள்,முட்டைகள் சப்ளை ஆகின்றன.

எனவே பறவைக் காய்ச்சல் இப்பகுதியில் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்மேற்கொள்ளப்பட்டுள்ளன. நாமக்கல் மண்டலத்தில் 10,000க்கும் மேற்பட்ட கோழிப் பண்ணைகள் உள்ளன.இங்கு இரண்டரை கோடிக்கும் மேலான முட்டைக் கோழிகள் வளர்க்கப்படுகின்றன. தினசரி 2 கோடி அளவுக்குமுட்டைகள் உற்பத்தியாகின்றன. இதுதவிர 700க்கும் மேற்பட்ட கறிக்கோழிப் பண்ணைகளும் உள்ளன. அங்கு 2கோடி பிராய்லர் கோழிகள் உள்ளன.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பல்வேறு நாடுகளில் பறவைக் காய்ச்சல் தாக்கியதைத் தொடர்ந்து இங்குமுன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அனைத்துக் கோழிப் பண்ணைகளிலும் பறவைக்காய்ச்சலைத் தடுப்பது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இதனால் பறவைக் காய்ச்சல்குறித்த விழிப்புணர்வு இங்குள்ள அனைவரிடமும் போதிய அளவில் இருக்கிறது.

நோய் பரவாமல் தடுப்பது எப்படி என்பதும் இங்குள்ள கோழிப் பண்ணையாளர்களுக்கு உரிய முறையில்விளக்கிக் காட்டப்பட்டுள்ளது. பல்வேறு தடுப்பு மருந்துகள், மூலிகை மருந்துகளைப் பயன்படுத்தி தகுந்தமுன்னேற்பாட்டுடன் இங்குள்ள கோழிப் பண்ணையாளர்கள் உள்ளனர்.

மேலும் தமிழக தட்பவெப்ப நிலையைப் பொருத்தவரை பறவைக் காய்ச்சலைப் பரப்பும் வைரஸ் பரவுவதற்குவாய்ப்பே இல்லை என்றும் இங்குள்ள நிபுணர்கள் கூறுகிறார்கள். இருப்பினும் வெளிநாடுகளில் மட்டும் இருந்தபறவைக் காய்ச்சல் இந்தியாவுக்குள்ளும் வந்துள்ளதால், இங்குள்ள கோழிப் பண்ணையாளர்களிடையே ஒருவிதஅச்சம் கலந்த பீதி ஏற்பட்டுள்ளதை மறுக்க முடியாது.

நாமக்கல் மண்டலத்தில் உற்பத்தியாகும் கோழிகள், முட்டைகளில் 30 சதவீதம் கேரளாவுக்கும், 10 சதவீதம் அரபுநாடுகளுக்கும் ஏற்றுமதியாகின்றன. மீதமுள்ள 60 சதவீதம் தமிழக பயன்பாட்டுக்கு அனுப்பப்படுகிறது.

1.5 கோடி முட்டைகள் தேக்கம்

பறவைக் காய்ச்சல் பீதி காரணமாக நாமக்கல் மண்டலத்தில் சுமார் 1 கோடி முட்டைகள் விற்காமல் தேக்கம் கண்டுள்ளது. இதனால் முட்டைஉற்பத்தியாளர்கள் பெரும் கவலை அடைந்துள்ளனர். முட்டைகள் தேங்குவதால் பல்வேறு உப தொழில்களும் பாதிக்கப்பட்டுள்ளன.

முட்டைகளை ஏற்றிச் செல்லும் லாரிகள் ஓடாமல் நிறுத்தப்பட்டுள்ளன. குளிர்பதன வசதி நாமக்கல்லில் இல்லாத காரணத்தால் முட்டைகளை சேமித்துவைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் முட்டைகள் ஒரு வாரத்திற்குப் பிறகு அழுகும் நிலை உருவாகியுள்ளது. இதனால் தினசரி குறைந்தது ஒருகோடி முட்டைகள் அழுகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையே, நாமக்கல் மண்டலத்தில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு ஏற்படவில்லை என்று தேசிய கோழி நோய் ஆராய்ச்சியாளர் டாக்டர்வேணுகோபால் தலைமையிலான நிபுணர் குழு மேற்கொண்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது.

இந்தியக் கோழிகளுக்கு இலங்கை தடை

இதற்கிடையே, இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் கோழிகளுக்கு இலங்கை அரசு தடை விதித்துள்ளது.

இதுதொடர்பாக அந்நாட்டின் சுகாராதத் துறை தொற்று நோய் பிரிவு இயக்குநர் டாக்டர் நிஹல் அபயசிங்கே தெரிவிக்கையில், இந்தியாவிலிருந்து இறக்குமதிசெய்யப்படும் கோழிகளை யாரும் வாங்க வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளோம். இந்தியாவில் உள்ள விவசாயப் பண்ணைகள் உள்ளிட்ட இடங்களுக்குசென்று இலங்கை திரும்பியவர்கள் உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு தங்களுக்கு பறவைக் காய்ச்சல் வைரஸ் தாக்கியுள்ளதாஎன்பதை பரிசோதித்துக் கொள்ளவும் உத்தரவிட்டுள்ளோம்.

இலங்கையில் பறவைக் காய்ச்சல் எவ்வளவு சீக்கிரம் கட்டுப்படுத்தப்படுகிறதோ அந்த அளவுக்கு இலங்கையிலும் அது பரவாமல் இருக்கும்.பறவைக் காய்ச்சல் பரவும் இடத்திற்குள் அதை கட்டுப்படுத்தும் வகையில் ஒவ்வொரு நாடும் தற்போது உள்ளது. அந்த சக்தி இலங்கைக்கும் உள்ளது.

இருப்பினும் வரும் முன் காப்பது நல்லது என்ற அடிப்படையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகலை இலங்கை சுகாதார அமைச்சகம் எடுத்துள்ளது. இலங்கையில்பறவைக் காய்ச்சல் பரவாமல் தடுக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன என்றார் அபயசிங்கே.

எப்படி சாப்பிடலாம்?

பறவைக் காய்ச்சல் பீதி இருந்தாலும் கூட கோழிக்கறியை உரிய முறையில் சுட வைத்துசாப்பிடலாம் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். அதாவது கோழியை அப்படியே சாப்பிடாமல், நன்கு வேக வைத்துஅதாவது 70 டிகிரி வரை வேக வைத்த பின்னர் சாப்பிடலாம். அதேபோல முட்டையை அப்படியே உடைத்துக்குடிக்காமல் நன்கு பொறித்தோ அல்லது அவித்தோ சாப்பிடலாம் என்று அவர்கள் விளக்குகின்றனர்.

உரிய முறையில் சுத்தம் செய்து, வேக வைத்து சாப்பிடுவதன் மூலம் வைரஸ் தாக்குதலிலிருந்து தப்பிக்கலாம்எனவும் அவர்கள் கூறுகின்றனர்.

பறவைக் காய்ச்சல் பீதி தேவையற்றது, அரசு இதுதொடர்பாக மக்களிடையே பீதியை பரப்பாமல் உரியவிளக்கத்தை அளித்து, கோழிக்கறி, முட்டை வியாபாரம் பாதிக்கப்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றுதேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவும் கோரிக்கை விடுத்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+