6வது டாக்டர் பட்டம் வாங்கினார் ஜெ!
சென்னை:
சென்னை டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா இன்று சென்னையில் நடந்தது.இந்த விழாவில், முதல்வர் ஜெயலலிதாவுக்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.
சென்னை டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டுமண்டபத்தில் இன்று நடந்தது. பல்கலைக்கழக வேந்தரும், ஆளுநருமான எஸ்.எஸ்.பர்னாலா விழாவுக்குத்தலைமை தாங்கி பட்டங்களை வழங்கினார்.இந்த நிகழ்ச்சியில் முதல்வர் ஜெயலலிதாவுக்கு, மாண்பமை சட்டவியல் முனைவர் (கெளரவ டாக்டர் பட்டம்) பட்டம்வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் ஜெயலிலதா பேசுகையில், மக்களிடமிருந்துதான் எனக்கு பலம் கிடைக்கிறது.என்னிடம் அவர்கள் அபார நம்பிக்கை வைத்துள்ளனர். அதேபோல அவர்களுக்கு மீண்டும் சேவையாற்ற மீண்டும்மீண்டும் வாய்ப்பளிக்கின்றனர்.
அவர்களுடன் நான் வாழ்நாள் முழுமைக்குமான கூட்டணியை அமைத்துள்ளேன். அதை சிதைக்க, அசைக்கயாராலும் முடியாது. எனக்கு அளிக்கப்பட்ட இந்த அரிய கெளரவத்தை பெறுவதற்காக உங்கள் முன் நிற்கும் நான்தமிழக மக்களுக்கு மீண்டும் சேவை புரிய என்னை அர்ப்பணித்துக் கொள்கிறேன்.
தமிழகத்திதல் தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் ஆகியோருக்கு69 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு வகை செய்யும் விதத்தில் கடந்த 1994ம் ஆண்டு சட்டம் கொண்டு வரப்பட்டது.தற்போது இதுதொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இருப்பினும் விரைவில் அரசமைப்புச்சட்டத்தில் இந்த இட ஒதுக்கீடு சேர்க்கப்படும் என நம்புகிறேன்.
சமூக மாற்றம் மற்றும் சமூக நீதி அடைவதற்காக சட்டத்தைத் திறமையான கருவியாக பயன்படுத்துவதற்கு நான்எப்போதும் முயன்று வந்திருக்கிறேன்.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நிலைநாட்டப்பட்டுள்ளது. இதில் தமிழகம் சாதனை படைத்துள்ளது. தமிழகத்தில்அமைதி நிலவுவது, தேசிய அளவில் பாராட்டப்படுகிறது, பேசப்படுகிறது. இது திடீரென வந்து விடவில்லை. எனதுசீரிய முயற்சியினால் சட்டம் ஒழுங்கு சீரடைந்துள்ளது.
தமிழக காவல்துறையை நவீனப்படுத்தியுள்ளோம். இதன் காரணமாக குற்றங்களை கண்டுபிடிப்பதுஅதிகரித்துள்ளது. 2001ம் ஆண்டு 71 சதவீதமாக இருந்த குற்றக் கண்டுபிடிப்பு 2005ல் 86 சதவீதமாகஉயர்ந்துள்ளது.
சந்தனக் கடத்தல் வீரப்பன் சுட்டு வீழ்த்தப்பட்டது தமிழக அரசு மற்றும் காவல்துறையின் மிகப் பெரிய சாதனைஆகும். இதேபோல திருட்டு விசிடியை ஒழிக்க சட்டத் திருத்தம் கொண்டு வந்தேன். லாட்டரியை ஒழித்தேன். மழைநீர் சேகரிப்பு திட்டத்தைக் கொண்டு வந்தேன். பெண்கலை துன்புறுத்தி தீங்கிழைப்பவர்களை தண்டிக்கவும் சட்டம்கொண்டு வந்தேன்.
மதுரையில் உயர்நீதிமன்றக் கிளை ரூ. 65,44 கோடி செலவில் உருவாக்கப்பட்டது. ஸ்ரீவில்லிபுத்தூரில் ரூ. 14.96கோடி செலவில் மாவட்ட செஷன்ஸ் நீதிமன்ற வளாகம் அமைக்கப்பட்டது. இந்தியாவிலேயே தமிழகத்தில்தான்வீடியோ கான்பரன்சிங் மூலம் அதிக அளவில் விசாரணை நடத்தப்படுகிறது. 11 சிறைச் சாலைகள், 270நீதிமன்றங்கள் இந்த வசதி பெற்றுள்ளன.
வழக்குகளில் தீர்ப்பு கூறப்படும் நாட்களும் குறைந்து கொண்டே வருகின்றன. ஒரு வழக்கில் 7 நாட்களிலேயேதீர்ப்பு கூறப்பட்டு தேசிய அளவில் சாதனை படைக்கப்பட்டுள்ளது என்றார் ஜெயலலிதா.
ஜெயலலிதா பெறும் 6வது கெளரவ டாக்டர் பட்டமாகும் இது. தொடர்பான செய்திகள்பு சென்னை பல்கலைக்கழகம், மதுரைகாமராஜர் பல்கலைக்கழகம், கோவை வேளாண்மைப் பல்கலைக்கழகம், டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப்பல்கலைக்கழகம், அண்ணாமலைப் பல்கலைக்கழகம் ஆகியவை ஜெயலலிதாவுக்கு கெளரவ டாக்டர் பட்டத்தைவழங்கியுள்ளன.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications