கருணாநிதி-ராமதாஸ் சந்திப்பு: கூட்டணியில் திருமா
சென்னை:
திமுக கூட்டணியிலிருந்து மதிமுக விலகும் சூழ்நிலையில், திமுக தலைவர் கருணாநிதியை பாமக நிறுவனர் டாக்டர்ராமதாஸ் இன்று சந்தித்துப் பேசினார்.
கோபாலபுரம் இல்லத்தில் நடந்த இந்த சந்திப்புக்குப் பின்னர் கருணாநிதி கூறுகையில், விடுதலைச் சிறுத்தைகளைகூட்டணியில் சேர்க்கக் கூடாது என்று கொள்கை முடிவெல்லாம் எடுக்கவில்லை. ஏற்கனவே கூட்டணியில் உள்ளகட்சிகளுக்கு எப்படி தொகுதிகளைப் பங்கிடுவது என்பது குறித்துதான் யோசிக்கிறோம். விடுதலைச்சிறுத்தைகளுக்கு நாங்கள் கதவை மூடி விடவில்லை.திமுக கூட்டணியின் வெற்றி வாய்ப்பு மிகவும் பிரகாசமாக உள்ளது. மதிமுக அதிமுகவுடன் கூட்டணி அமைக்குமாஎன்பது குறித்து எனக்கு எதுவும் தெரியாது என்றார் கருணாநிதி. (இது வைகோவின் பல்டிக்கு முன்)
ராமதாஸ் பேட்டி:
கருணாநிதியை சந்தித்து விட்டு வெளியே வந்த ராமதாஸிடம் என்ன பேசினீர்கள் என்று கேட்டபோது, தேர்தல்தொடர்பாக பேசினோம். சுமூகமான பேச்சுவார்த்தை நடந்தது. திருப்தியாக உள்ளேன். மீண்டும் பேசுவோம்.
அதிமுக ஆட்சியை அகற்ற வேண்டும். அது ஒன்றுதான் எங்களது குறிக்கோள். விடுதலைச் சிறுத்தைகளைகூட்டணியில் சேர்ப்பது தொடர்பாகவும் கருணாநிதியிடம் பேசினேன். வைகோவும் எங்களுடன் இருக்கவிரும்புகிறேன் என்றார் அவர்.
இந்த சந்திப்பு நடந்தபோது, வைகோ, திமுக கூட்டணியிலிருந்து விலகக் கூடிய நிலை இருந்தது. இதையடுத்தேவிடுதலைச் சிறுத்தைகளை கூட்டணியில் சேர்ப்பது தொடர்பாக ராமதாஸை அழைத்து கருணாநிதி பேசினார்.
ஆனால் பிற்பகலில் வைகோ பெரிய பல்டி அடித்து கூட்டணியில் நான் நீடிப்பேன் என திட்டவட்டமாக அறிவித்துவிட்டார்.
இருப்பினும் விடுதலைச் சிறுத்தைகளுக்கு ராமதாஸ் கோரிக்கையை ஏற்று கூட்டணியில் இடம் கொடுக்கப்படுவதுஉறுதியாகி உள்ளது.
கருணாநிதியின் கருத்து குறித்து திருமாவளவன் கூறுகையில், திமுக கூட்டணியில் பாமக இருப்பதால், அந்தஅணியில் சேர வேண்டும் என்று விரும்பினோம். அந்த விருப்பம் இன்னும் அப்படியேதான் இருக்கிறது, அதைகைவிட்டு விடவில்லை. டாக்டர் ராமதாஸுடன் கலந்து பேசி ஓரிரு நாட்களில் முடிவை அறிவிப்போம் என்றார்.
விடுதலைச் சிறுத்தைகளை உள்ளே இழுப்பது போல, விஜயகாந்த்தையும் தாஜா செய்து தங்கள் பக்கம் திருப்பதிமுக முயற்சிகளைத் தொடங்கியுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications