மதுரை இன்ஸ்பெக்டருக்கு உயர்நீதிமன்றம் தடை
சென்னை:
அடாவடிக்குப் பெயர் போன சர்ச்சைக்குரிய மதுரை அண்ணா நகர் இன்ஸ்பெக்டர் மாரிமுத்து அந்தப் பதவியில் தொடருவதற்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
மதுரை அண்ணா நகர் காவல் நலையத்தில் இன்ஸ்பெக்டராக இருந்தவர் மாரிமுத்து, வழக்கறிஞர் ஒருவர் கொடுத்த அபிடவிட்டையே திருத்தினார். இந்த மோசடியைச் செய்த மாரியை கைது செய்து அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.ஆனால், இந்த மோசடி இன்ஸ்பெக்டருக்கு ஆதரவாகவே அரசு நடந்து கொண்டது.
இதையடுத்து மதுரை மாவட்ட வழக்கறிஞர்கள் கடந்த 15 நாட்களுக்கும் மேலாகவேலைநிறுத்தம் செய்து வருகின்றனர்.
மதுரை வழக்கறிஞர்களுக்கு ஆதரவாக சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்களும் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
ஆனால் தமிழக அரசும், காவல்துறையும் வழக்கறிஞர்களின் போராட்டத்தைக் கண்டுகொள்ளவில்லை. மாரிமுத்துவை காப்பாற்றுவதிலேயே கவனம் செலுத்தினர்.
இந் நிலையில் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத தலைவர் பிரபாகரன் உயர்நீதிமன்றத்தில் ஒரு ரிட் மனு தாக்கல் செய்தார்.
அதில், மோசடி செய்த இன்ஸ்பெக்டர் மாரிமுத்து அந்தப் பதவியில் நீடிக்க தடை விதிக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சதாசிவம், சம்பத்குமார் ஆகியோர், மனுதாரரின் வழக்கில் நியாயம் இருப்பதாக தெரிகிறது.
எனவே சம்பந்தப்பட்ட இன்ஸ்பெக்டர் மாரிமுத்து அண்ணா நகர் காவல் நிலைய இன்ஸ்பெக்டராக தொடரக் கூடாது என்று இடைக்கால உத்தரவைப் பிறப்பித்தனர்.
இதுதொடர்பாக மாநில உள்துறைச் செயலாளர், டிஜிபி, மதுரை மாநகர காவல்துறை ஆணையர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவைத் தொடர்ந்து தங்களது போராட்டத்தை வாபஸ் பெறுவதாக பிரபாகரன் தெரிவித்துள்ளார்.
இருப்பினும் மாரிமுத்து டிஸ்மிஸ் செய்யப்படும் வரை தங்களது கோரிக்கையை கைவிடப் போவதில்லை என்று மதுரை வழக்கறிஞர்கள் அறிவித்துள்ளனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications