தமிழகத்தில் ஒரே நாளில் வாக்குப்பதிவு?
திருச்சி:
தமிழக சட்டசபைத் தேர்தலை ஒரே நாளில் நடத்தி முடிப்பது குறித்து பரிசீலிக்கப்படும்என தேர்தல் ஆணையர் கோபாலசாமி கூறியுள்ளார்.
திருச்சியில் இன்று 6 மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் தேர்தல் ஏற்பாடுகள் குறித்துகோபாலசாமி ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக்குப் பின்னர்செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,ஒரே நாளில் வாக்குப் பதிவை நடத்தி முடிக்கக் கூடிய வசதிகள், சாத்தியக்கூறுகள்உள்ளன. இதுகுறித்து பரிசீலிப்போம்.
இறுதி வாக்காளர் பட்டியல் வெளியான பிறகே, அதிகாரிகள், காவல்துறையினர்இடமாற்றம் மேற்கொள்ளப்படும்.
தமிழகத்தில் இதுவரை 55 சதவீதம் வாக்காளர்களுக்கு புகைப்பட அடையாளஅட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. மீதம் உள்ளோருக்கு தற்போது வழங்கப்பட்டுவருகிறது. தமிழக தேர்தலுக்கு 52,000 வாக்குச் சாவடிகள் அமைக்கப்படும் என்றார்கோபாலசாமி.
இதற்கிடையே தேர்தல் கமிஷன் அனுப்பியுள்ள 6 சிறப்பு அதிகாரிகள்மாவட்டவாரியாக ஆய்வு செய்து, ஆளும் கட்சியினரால் போலியாக வாக்காளர்பட்டியலில் சேர்க்கப்பட்டவர்களை நீக்கி வருகின்றனர். இதன் பிறகு வரும் 27ம் தேதிஇறுதி வாக்காளர் பட்டியல் வெளியாகும் என்று தெரிகிறது.
முன்னதாக பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டும், கைது செய்யப்படாத கிரிமினல்களைக்கைது செய்யக் கோரி தமிழக அரசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது.இதன்படி தமிழகத்தில் 8,500 பேர் கைது செய்யப்பட்டாக வேண்டும்.
இவர்களை அமுக்க இணை கமிஷ்னர்கள் சைலேந்திர பாபு, சுந்தரமூர்த்தி ஆகியோர்தலைமையில் 40 எஸ்கள் கொண்ட மாபெரும் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.இவர்கள் பிடிவராண்ட் பிறப்பிக்கப்பட்டவர்களை தேடி சல்லடை போடஆரம்பித்துள்ளனர்.
கடந்த சில நாட்களில் மட்டும் இவர்களில் 50 பேர் பிடிபட்டுவிட்டதாகத் தெரிகிறது.இதையடுத்து பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்ட கிரிமினல்கள் பெங்களூர், ஆந்திரா,மும்பைக்குத் தப்ப ஆரம்பித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications