வாழப்பாடி மகன் தனி கட்சி-அதிமுகவுடன் கூட்டணி?

Subscribe to Oneindia Tamil

சென்னை:

பாமகவில் முன்னணித் தலைவர்களில் ஒருவராக ஒருகாலத்தில் விளங்கிய பேராசிரியர்தீரன், மக்கள் கட்சி என்ற பெயரில் வரும் 27ம் தேதி புதிய கட்சியைத் தொடங்குகிறார்.

அதிமுகவுக்கு ஆதரவாக மக்கள் கட்சி செயல்படும் எனவும் அவர் அறிவித்துள்ளார்.

பாமகவில் பொதுச் செயலாளராக இருந்த தீரன், பாமகவிலிருந்து நீக்கப்பட்டவுடன்தமிழ் பாமக என்ற பெயரில் புதிய கட்சியைத் தொடங்கினார். காலப்போக்கில் அந்தக்கட்சியில் தீரனைத் தவிர வேறு யாரும் இல்லாத நிலை ஏற்பட்டது.

இடையில் சிறிது காலம் அமைதி காத்து வந்த தீரன் தற்போது இன்னொரு கட்சியைத்தொடங்கியுள்ளார். மக்கள் கட்சி என்று அதற்கு பெயர் சூட்டியுள்ளார்.கோயம்பேட்டில் வருகிற 27ம் தேதி புதிய கட்சியின் தொடக்க விழா நடைபெறுகிறது.அப்போது கட்சியின் பெயர் மற்றும் கொடியை அறிமுகப்படுத்துகிறார்.

கட்சி குறித்து தீரன் கூறுகையில், தேர்தலுக்காக இக்கட்சியை ஆரம்பிக்கவில்லை.குடும்ப அரசியல் நடத்திய ராமதாஸால் நான் பாதிக்கப்பட்டு கட்சியை விட்டும்நீக்கப்பட்டேன். உழைக்கும் மக்கள் அனைவருக்காகவும் இந்தக் கட்சியைதொடங்குகிறேன்.

மத்தியில் மட்டும் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி என்று திமுக பம்மாத்து செய்கிறது.திமுக கூட்டணிக்கு தமிழக மக்கள் நலன் மீது ஆர்வம் இல்லை.

வரும் தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்து செயல்படவுள்ளோம். விரைவில்மதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து பேசவுள்ளோம் என்றார் தீரன்.

தீரனைப் போலவே முன்னஆள் காங்கிரஸ் தலைவர் வாழப்பாடி ராமமூர்த்தியின் மகன்சுகந்தனும், முன்னாள் பாமக எம்பி பு.த.இளங்கோவன் உள்ளிட்ட சிலரும் புதிய கட்சிதொடங்கக் கூடும் எனத் தெரிகிறது.

இந்தக் கட்சிகள் எல்லாம் அதிமுகவுடன் கூட்டணி வைத்து, திமுக கூட்டணியை விடமெகா கூட்டணியை அமைக்கக் கூடும் எனத் தெரிகிறது.

இதில் சுகந்தனும் இளங்கோவனும் இப்போது பாஜகவில் இருந்தது குறிப்பிடத்தக்கது.சமீபத்தில் சுகந்தன் அதிமுகவில் சேர விரும்பியதாகவம், ஆனால், தனிக் கட்சிதொடங்கிவிட்டு அதிமுகவுக்கு வருமாறும், (இதனால் கூட்டணியில் ஒரு கட்சிசேருமே) ஒரு சீட் தருவதாகவும் அவருக்கு உறுதியளிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு சின்னச் சின்னதாய் உருவாகி வரும் கட்சிகளில் பெரும்பாலானவைராமதாசுக்கு எதிராக உருவாகியுள்ள வன்னியர் சமூகத்தினரின் கட்சிகள் என்பதுகுறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே வன்னிய சமூகத் தலைவரான திண்டிவனத்தையும் ஒரு கட்சியைஆரம்பித்தாகிவிட்டது. அவரும் அதிமுகவுடன் கூட்டணி அமைக்கவுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+