பிறந்த நாள்: வாழ்த்த வர வேண்டாம்- ஸ்டாலின்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
எனது பிறந்தநாளன்று வாழ்த்து தெவிப்பதற்காக சென்னைக்கு தொண்டர்கள் வர வேண்டாம் என்று திமுக துணைப் பொதுச் செயலாளர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அவர் விடுத்துள்ள அறிக்கை: தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிறது, திருச்சியில் திமக மாநில மாநாடு, இளைஞர் அணி வெள்ளி விழா மாநாடு நடைபெறவுள்ளது.இந் நிலையில் மார்ச் முதல் நாள் எனது பிறந்த நாள். இப்பிறந்த நாளை கொண்டாட வேண்டாம் என்று நான் முடிவு செய்துள்ளேன். அன்றைய தினம் நான் சென்னையில் இருக்கப் போவதும் இல்லை.
நமது அணி சட்டசபைத் தேர்தலில் பெரு வெற்றி பெற வேண்டும், மாநில மாநாடும், வெள்ளி விழா மாநாடும் பிரமாண்டமாக நடைபெற வேண்டும் என்பதிலும்தான் தொண்டர்களின் முழுக் கவனம் இருக்க வேண்டும் என விரும்புகிறேன்.
எனவே தொண்டர்கள் எங்கிருந்து வாழ்த்தினாலும் அதை இதயபூர்வமாக ஏற்றுக் கொண்டு, பிறந்த நாளன்று சென்னைக்கு வருவதைத் தவிர்த்து தேர்தல் பணிகளில் முழு மூச்சாக ஈடுபட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என கூறியுள்ளார் ஸ்டாலின்.












Click it and Unblock the Notifications