காளிமுத்துவுக்கு மீண்டும் உடல் நலக்குறைவு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
அதிமுக அவைத் தலைவர் காளிமுத்துவுக்கு மீண்டும் உடல் நலக்குறைவு ஏற்பட்டு மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கடந்த 16ம் தேதி தலைசுற்றல், மயக்கம் காரணமாக காளிமுத்து அப்பல்லோ மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டார். மூளைக்குச் செல்லும் ரத்தக் குழாயில் ரத்த அழுத்தம் குறைவாக இருந்ததால் தலைசுற்றல் ஏற்பட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.தீவிர சிகிச்சைக்குப் பின்னர் குணமடைந்த காளிமுத்து கடந்த 22ம் தேதி வீடு திரும்பினார். இந் நிலையில் வியாழக்கிழமை இரவு அவருக்கு மீண்டும் உடல் நலக்குறைவு ஏற்பட்டது.
இதையடுத்து உடனடியாக அவர் அப்பல்லோ மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
வரும் 28ம் தேதி வரை காளிமுத்துவின் அனைத்து நிகழ்ச்சிகளும் ஏற்கனவே ரத்து செய்யப்பட்டுள்ளது நினைவிருக்கலாம்.












Click it and Unblock the Notifications