எஸ்வி சேகரின் பந்தா-கடுப்பில் அதிமுகவினர்
சென்னை:
மரக்காணத்தில் நடந்த அதிமுக பொதுக் கூட்டத்தில் பேச அழைக்கப்பட்ட நாடக நடிகர் எஸ்.வி. சேகர் ஓவர்பந்தா பண்ணியதால் அவரைத் நீக்கிவிட்டு, நடிகர் ராதாரவியைக் கொண்டு வந்து பேச வைத்தனர் அதிமுகவினர்.
இந்தக் கூட்டத்தில் பங்கேற்க ஒப்புக் கொண்ட நாடகம் எஸ்.வியை, கட்சியினர் தொடர்பு கொண்டு கன்பர்மேசன்கேட்டபோது, என் பேச்சுக்கு இப்போ விலை ரொம்ப ஜாஸ்தி. அதனால என்னை ஸ்பெஷலா கவனிக்கனும்என்று அதிக துட்டு கேட்டுள்ளார்.இதையடுத்து கடுப்பான கட்சியினர், நீங்க வரவே வேண்டாம் என்று கூறிவிட்டு அவசர, அவசரமாகராதாரவியைக் கூட்டி வந்து பேச வைத்தனர்.
நாடக நடிகரின் ஆட்டத்தால் அதிமுகவினர் கடுப்படைந்துள்ளனர். இந்த விவகாரத்தை முதல்வர்ஜெயலலிதாவின் காதுக்கு அமைச்சர் ஒருவர் மூலமாக கொண்டு சென்றுள்ளனர் மரக்காணம் பகுதிஅதிமுகவினர்.
ஜோசியம் சொன்ன எஸ்எஸ் சந்திரன்:
இந் நிலையில் பெரியகுளத்தில் அதிமுக பொதுக் கூட்டத்தில் பேசிய நடிகரும் அதிமுக ராஜ்யசபா எம்பியுமானஎஸ்.எஸ்.சந்திரன்,
பெரியகுளத்தின் அதிமுக தொண்டரை, கைக்கடிகாரம் கூட கட்டாத பன்னீர்செல்வத்தை, எம்எல்ஏ ஆக்கி,அமைச்சராக்கி, முதல்வராகவும் அமர வைத்தவர் புரட்சித் தலைவி.
திமுக தலைவர் கருணாநிதி தனது கட்சியின் பொதுச்செயலாளர் அன்பழகனை முதல்வராக்க முன் வருவாரா?கருணாநிதியின் குடும்ப வாரிசுகளுக்கு மட்டும் முதல்வர், கேபினட் மந்திரி பதவிகள், மற்றவர்களுக்கு வெறும்"அல்வா தான்.
திமுக கூட்டணியில் உள்ளவர்களின் ஜாதகங்களை நான் பார்த்தேன். கருணாநிதிக்கு "ஜென்மசனி, வைகோவுக்கு"விரயசனி, ராமதாஸிற்கு "கண்டசனி . இப்படி இருந்தால் கூட்டணி எப்படிஉருப்படும்?
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட கருணாநிதி சட்டசபைக்கு வருவதில்லை. ஆனால் 3 மாதத்திற்கு ஒருமுறை வந்துஎம்எல்ஏக்களுக்கு தரப்படும் சம்பளத்தை மட்டும் பெற்றுச்சென்றது எந்த விதத்தில் நியாயம்? இன்றைய நிலையில்கருணாநிதியின் குடும்ப சொத்து ரூ. 13,600 கோடி. இது எப்படி வந்தது?
கருணாநிதி குடும்ப "டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களை பார்த்தால் கணவன், மனைவி ஒற்றுமையைசீர்க்குலைக்கச் செய்யும் கேரக்டர்களாக சித்தரித்து காட்டுகின்றனர்.
இவன் மனைவியை அவன் கூட்டிசெல்வதும், அவள் கணவனை மற்றொருவள் இழுத்துச்செல்வது எனசமுதாயத்தை பாழ் படுத்தும் நாடகங்களாக தயாரித்து ஒளிபரப்பப்படுகிறது.
இதையெல்லாம் பார்க்க வேண்டியது தமிழக மக்களின் தலையெழுத்து என்றார்.












Click it and Unblock the Notifications