ஜார்ஜ் புஷ் நாளை இந்தியா வருகை
வாஷிங்டன்:
அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் நாளை இந்தியா வருகிறார்.
இந்தியா, பாகிஸ்தானில் ஒரு வார கால பயணம் மேற்கொள்ள இருக்கும் புஷ், சர்வதேச விவகாரங்கள்,தீவிரவாத ஒழிப்பு ஆகியவை குறித்து பிரதமர் மன்மோகன் சிங், பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரப்ஆகியோருடன் ஆலோசனை நடத்தவுள்ளார்.தீவிரவாத ஒழிப்பு, இந்திய அணு உலைகளை சர்வதேச அணு சக்தி கமிஷனின் மேற்பார்வையின் கீழ் கொண்டுவருவது, இந்தியாவுடன் பாதுகாப்பு ஒப்பந்தம், இந்திய விமானப் படைக்கு அமெரிக்க போர் விமானங்களைவழங்குவது, பயோ டெக்னாலஜி உள்ளிட்ட ஆய்வுகளில் இரு நாடுகளும் இணைந்து பணியாற்றுவது உள்ளிட்டவிவகாரங்கள் குறித்து இந்தியாவுடன் புஷ் விவாதிக்கவுள்ளார்.
ஹைதராபத்துக்குச் செல்லவிருக்கும் புஷ் அங்கு சாப்ட்வேர் நிறுவன அதிபர்களிடையே உரையாற்றவுள்ளார்.
புஷ்ஷின் வருகையையொட்டி டெல்லியிலும் ஹைதராபாத்திலும் மிக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்செய்யப்பட்டுள்ளன.
டெல்லியில் அவர் தங்கப் போகும் ஷெரட்டன் நட்சத்திர ஹோட்டல் முழுக்க முழுக்க அமெரிக்க பாதுகாப்புப்படையினரின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுவிட்டது.
அந்த ஹோட்டலில் இருந்த அனைவரும் வெளியேற்றப்பட்டு, அனைத்து தளங்களும் அறைகளும் அமெரிக்கஅதிகாரிகளின் கட்டுப்பாட்டில் தரப்பட்டுவிட்டன.
அதே போல டெல்லி சர்வதேச விமான நிலையத்திலும் அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில்ஈடுபட்டுள்ளனர்.
புஷ்ஷின் விமானம் தரையிறங்கும்போது டெல்லி விமான நிலையத்தில் இருந்து எந்த விமானமும் கிளம்பாது.அதே போல விமான நிலையத்திற்கு வரும் அனைத்து விமானங்களும் வானிலேயே சுற்றிவிட்டு பின்னர் தான்தரையிறங்க அனுமதிக்கப்படும்.
புஷ்சுடன் அவரது மனைவியும் வருகிறார். முதல் கட்டமாக இந்தியாவில் பயணத்தை முடித்துக் கொண்டு அவர்பாகிஸ்தான் செல்கிறார்.
புஷ்சின் வருகையைத் தொடர்ந்து ஜம்மு காஷ்மீரில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. புஷ்சுக்கு எதிராகஇடதுசாரிக் கட்சிகள் போராட்டம் நடத்தவுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications