ராணி மேரி கல்லூரி வழக்கு-கோர்ட்டில் ஸ்டாலின்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னை ராணி மேரிக் கல்லூரிக்குள் அத்துமீறி நுழைந்ததாக கூறி தொடரப்பட்டவழக்கில், திமுக துணைப் பொதுச் செயலாளர் ஸ்டாலின் மற்றும் ஐந்து திமுகஎம்.எல்.ஏக்கள் சென்னை நீதிமன்றத்தில் இன்று நேரில் ஆஜராகினர்.

கடந்த 2003ம் ஆண்டு சென்னை கடற்கரையில் உள்ள ராணி மேரிக் கல்லூரியைஇடித்துவிட்டு அங்கே தலைமைச் செயலகம் கட்ட முதல்வர் ஜெயலலிதாதிட்டமிட்டார்.

இதை எதிர்த்து கல்லூரி மாணவிகள், ஆசிரியர்கள் பெரும் போராட்டத்தில் குதித்தனர்.உள்ளிருப்புப் போராட்டத்திலும் அவர்கள் ஈடுபட்டனர்.

அவர்களை கல்லூரிக்குள் சென்று சந்தித்த ஸ்டாலின், மாணவிகளின் போராட்டத்திற்குஆதரவு தெரிவித்தார். இதைத் தொடர்ந்து ஸ்டாலின் மற்றும் திமுக எம்.எல்.ஏக்கள்பொன்முடி, அ.மா.வேலு, எஸ்.ஏ.எம்.உசேன், ஜெ.அன்பழகன், புகழேந்தி உள்ளிட்ட7 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

அத்துமீறி பெண்கள் கல்லூரிக்குள் நுழைந்ததாக அவர்கள் மீது வழக்குதொடரப்பட்டது.

இந்த வழக்கு எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்தவழக்கில் இன்று ஸ்டாலின் உள்ளிட்ட 6 பேர் நேரில் ஆஜராகினர்.

அப்போது அரசுத் தரப்பில், குற்றப்பத்திரிக்கை நகல் தயாராகி வருவதாகத்தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து வழக்கின் விசாரணையை அடுத்த மாதம் 28ம்தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

பழமை வாய்ந்த கட்டடங்களை இடிக்கத் தடை விதித்து ராணி மேரிக் கல்லூரியைக் காப்பாற்றினர் மத்தியில்இருந்த திமுக அமைச்சர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+