For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இவங்களுக்கும் சீட் வேணுமாம்!

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ள இந்திய மக்கள் கட்சி மற்றும் இந்திய கிறிஸ்தவமதச்சார்பற்ற கட்சி ஆகிய இரு பெரும் கட்சிகளும், தங்களுக்கு சில தொகுதிகளைஒதுக்கித் தருமாறு ஜெயலலிதாவுக்கு கோரிக்கை விடுத்துள்ளன.

திமுகவுக்கு தாங்கள் சற்றும் இளைத்தவர்கள் இல்லை என்பது போல அதிமுகவும் தன்பங்குக்கு ஏகப்பட்ட கட்சிகளை சேர்த்து வருகிறது.

என்ன வித்தியாசம் என்றால், திமுகவில் இருப்பது ரொம்ப காலத்திற்கு முன்பேஆரம்பிக்கப்பட்ட கட்சிகள். ஆனால் அதிமுகவிலோ, நேற்று பிறந்த, இப்ப பிறந்த,விரைவில் பிறக்கப் போகிற குட்டிக் குட்டிக் கட்சிகள்தான் நிறைய இருக்கின்றன.

அந்த வகையில், மேலும் 2 குட்டிக் கட்சிகள், அம்மாவுக்கு ஆதரவு தருவதாகஅறிவித்துள்ளன. அதில் ஒரு கட்சியான இந்திய மக்கள் கட்சியின் மாநிலபொதுக்குழுக் கூட்டம் கட்சித் தலைவர் அதிரை எம்.எம்.இப்ராகிம் தலைமையில்நடந்தது.

இக்கூட்டத்தில் அதிமுகவுக்கு ஆதரவு தெரிவிப்பதாக தீர்மானிக்கப்பட்டது. மேலும்சில தொகுதிகளை தங்களது கட்சிகளுக்கு ஒதுக்குமாறும் அக்கட்சி கோரியுள்ளது.

எத்தனை தொகுதி என்று தங்கள் வாயால் கேட்க மாட்டார்களாம். அம்மா குடுக்குறதைவாங்கிக்குவாங்களாம்.

இந்திய கிறிஸ்தவ மதச்சார்பற்ற கட்சி என்ற இன்னொரு அடையாளம் தெரியாதகட்சியும் அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்து, கையோடு சீட்டும் கேட்டுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X