அதிமுக நடிகர்களுக்கு லியாகத் அலிகான் பயிற்சி
சென்னை:
அதிமுகவில் புதிதாக சேர்ந்துள்ள நடிகர்களுக்கு மேடைப் பேச்சு பயிற்சியை, அக்கட்சியில் புதிதாக சேர்ந்துள்ள இயக்குனர், வசனகர்த்தாவான லியாகத் அலிகான் கொடுத்து வருகிறார்.
விஜயகாந்த்தின் பெரும்பாலான படங்களுக்கு பரபரப்பான வசனம் எழுதியவர் லியாகத் அலிகான். விஜயகாந்த்தின் மிக நெருங்கிய நண்பராகவும் விளங்கினார். விஜயகாந்த் படங்களின் அனல் பறக்கும் வசனங்கள் பலவற்றுக்கு சொந்தக்காரராக விளங்கிய லியாகத் அலிகானை மெல்ல ஓரம் கட்டிவிட்டார் விஜய்காந்த்.விஜய்காந்தின் மனைவி-மச்சான் ஆகியோர் சேர்ந்து லியாகத் தவிர, விஜய்காந்தின் மிக நெருக்கமான நண்பராக இருந்த இப்ராகிம் ராவுத்தர், மன்சூர் அலி கான் ஆகியோரையும் ஓரங்கட்டிவிட்டனர்.
இதையடுத்து அதிமுகவில் சேர்ந்தனர் லியாகத்தும் மன்சூரும்.
இதில் லியாகத்துக்கு சில முக்கியப் பொறுப்புகளை ஜெயலலிதா வழங்கியுள்ளார். அதில், ஜெயலலிதாவின் பிரசாரக் கூட்டங்களில் பேசுவதற்கான அறிக்கைகளைத் தயாரிக்கும் பொறுப்பும் ஒன்று.
அரசின் சாதனைகள், எதிர்க்கட்சிகளின் வீக் பாயிண்டுகளை அடிப்படையாக வைத்து இந்த அறிக்கைகளை தயார் செய்து வருகிறார் லியாகத்.
இன்னொரு புறம், அதிமுகவில் புதிதாக சேர்ந்துள்ளவர்களுக்கு பேசுவதற்கான பயிற்சியையும் லியாகத் அலிகான் கொடுத்து வருகிறார்.
நடிகர்கள் விஜயக்குமார், முரளி, செந்தில் உள்ளிட்டவர்களுக்கு மேடையில் பேச்சே வராது. நடுக்கத்தில் ஆடுவார்கள். அதிலும் செந்தில் நிலைமை ரொம்ப மோசம்.
முரளிக்கோ தமிழே வராது. புர்ச்சித் தலைவி என்று தான் சொல்வார். தமில் மக்கலே என்று இவர் வாய் நிறைய சொல்லும்போது பேச்சைக் கேட்பவர்கள் நொந்து கொள்ள வேண்டும்.
ரஜினி, அர்ஜூன் போல கர்நாடகத்தைச் சேர்ந்தவரான முரளிக்கு தமிழ் ரொம்ப கஷ்டம்.
எனவே இது போன்றவர்களுக்கு லியாகத் அலிகான்தான் மேடைப் பேச்சு, பாயிண்டுகளை எடுத்துக் கொடுத்து இவ்வாறு பேசுங்கள், இப்படிப் பேசுங்கள் என்று சொல்லிக் கொடுத்து வருகிறாராம்.
இதுதவிர அதிமுகவின் முக்கியப் பேச்சாளர்களுக்கும் லியாகத் அலிகானே அறிக்கைகளைத் தயாரித்துக் கொடுத்து வருகிறாராம். இந்தப் பணிக்காக லியாகத் அலிகானுக்கு 4 உதவியாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களுக்கு தினசரி சம்பளம் ஆயிரம் ரூபாயாம். நல்ல பேக்கேஜ்ஜா இருக்கே...
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications