அதிமுக-மதிமுகவினர் வெடி போட்டு மகிழ்ச்சி!
Subscribe to Oneindia Tamil
சென்னை :
அதிமுக கூட்டணியில் மதிமுக, இணைந்ததையடுத்து சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளிலும் அதிமுக, மதிமுக தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர்.வருவாரா, மாட்டாரா என்று பெரும் தவிப்புடன் காத்திருந்த அதிமுகவினருக்கு, வைகோவின் வருகை பெரும் உற்சாகத்தை அளித்துள்ளது. இனி வெற்றி நிச்சயம் என்ற நம்பிக்கை அவர்களுக்கு வந்து விட்டது.
ஜெயலலிதா, வைகோ சந்திப்பு குறித்து தகவல்கள் வெளியானவுடன், தமிழகம் முழுவதும் அதிமுகவினரும் மதிமுகவினரும் ஒன்றாகக் கூடி பட்டாசுகள் வெடித்து சந்தோஷத்தை வெளிப்படுத்தினர்.
அதே ஜெயலலிதாவின் இல்லம் அமைந்துள்ள போல போயஸ் தோட்டப் பகுதியில் ஏராளமான மதிமுகவினரும் கூடினர். அங்கு வந்த அதிமுகவினரும் மதிமுகவினரும் ஒருவருடன் ஒருவர் கை குலுக்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.












Click it and Unblock the Notifications