காற்றில் பறந்த லட்சியங்கள்: பாஜக கருத்து
Subscribe to Oneindia Tamil
சென்னை:
லட்சியங்களை காற்றில் பறக்க விட்டு விட்டு அதிமுகவுடன் மதிமுக கூட்டணி அமைத்துள்ளதாக பாஜக தேசிய துணைத் தலைவர் இல.கணேசன் கூறியுள்ளார்.
அவர் கூறுகையில், தேர்தல் களத்தில் நிற்கும் அனைத்துக் கட்சிகளுமே, அதிக இடத்தில் போட்டியிட வேண்டும் என்ற குறுகிய நோக்கத்தில்தான் தேர்தலை சந்திக்கிறார்கள்.மதிமுகவும், அதிமுக இடங்களில் போட்டியிட வேண்டும் என்ற நோக்கில்தான் அணி மாறியுள்ளது. இந்தக் குறுகிய லட்சியத்திற்காக தங்களது கொள்கைகள், இதுவரை பேசி வந்த லட்சியங்களை காற்றில் பறக்க விட்டுள்ளது மதிமுக.
மதிமுக அணி மாறும் வரை அதிமுகவும், திமுகவும் சம பலத்துடன் இருந்தன. இப்போது இந்த நிலையில் மாற்றம் ஏற்படும்.
நாங்கள்தான் ஆட்சி அமைப்போம் என்று யாராலும் உறுதியாக கூற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. போட்டி கடுமையாக இருக்கும்.
பாஜகவைப் பொருத்தவரை எங்கெல்லாம் எங்களுக்கு வாய்ப்பு உள்ளதோஅங்கெல்லாம் மும்முனைப் போட்டி கடுமையாக இருக்கும் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications