ஏன்னு புரியலியே.. கார்த்திக் புலம்பல்!

Subscribe to Oneindia Tamil

சென்னை:

அதிமுக கூட்டணிக்குத் தயார் என்று பலமுறை கூறியும், இன்னும் அதிமுகவிலிருந்து அழைப்பு வராதது ஏன் என்று புரியவில்லை என பார்வர்ட் பிளாக் கட்சித் தலைவர் நடிகர் கார்த்திக் தெரிவித்துள்ளார்.

அதிமுக கூட்டணியில் சேருமாறு தொடக்கத்தில் கார்த்திக்குக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் ஏகப்பட்ட வலியுறுத்தல்கள் வந்தன. அப்போதெல்லாம் பந்தா காட்டிக் கொண்டு திடீரென கருணாநிதியை சந்தித்து, தான் ஒரு அரசியல் புலி என்பது போல நடந்து கொண்டார் கார்த்திக்.

இதனால் நடராஜனே ரெக்கமெண்ட் செய்தும் கூட அவரை அதிமுக கூட்டணியில் சேர்க்க முதல்வர் ஜெயலலிதா ஆர்வம் காட்டவில்லை.

இப்போது கார்த்திக்கின் நிலை படு கவலைக்கிடமாக உள்ளது.

திடீரென வீசிய அரசியல் சுனாமியால் அதிமுக முகாம் இப்போது பயங்கர பலமடைந்து விட்டது.

வைகோ விட்டமின் சாப்பிட்டு விட்டதால், இனிமேல் யாரும் தேவையில்லை என்ற ரேஞ்சுக்கு அதிமுக படு தெம்பாக காணப்படுகிறது.

எனவே கூட்டணிக்காக திறந்து வைத்திருந்த இரண்டு கதவுகளில் ஒரு கதவை அதிமுக மூடி விட்டது. மிச்சள்ள ஒரு கதவின் வழியாக, உள்ளே செல்வதற்காக ஏகப்பட்ட பேர் நீண்ட கியூ வரிசையில் நின்று கொண்டுள்ளனர். அவர்களில் ஒருவராக இப்போது கார்த்திக்கும் நற்கிறார், கடைசியாக

கூப்பிட்டபோதெல்லாம் கண்டுகொள்ளாமல், ஆலோசனை, ஆலோசனை என்று அலைந்து கொண்டிருந்த கார்த்திக் இப்போது என்னைக் கூப்பிடுங்கள், உடனே வந்து சேர்ந்து விடுகிறேன் என பலமுறை ஓலை அனுப்பியும் ஜெயலலிதா கண்டுகொள்ளாமல் வைத்துள்ளார்.

கார்த்திக்கை ஒதுக்கி வைத்திருந்தாலும் கூட குட்டிக் குட்டிக் கட்சிகளை எல்லாம்கூப்பிட்டு கூப்பிட்டு சீட் கொடுத்து வரும் ஜெயலலிதாவின் போக்கு கார்த்திக்ஆதரவாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியாக உள்ளது.

இந் நிலையில் கார்த்திக் இன்று ஜெயலலிதாவை சந்திக்க போயஸ் கார்டனுக்கு போகப்போவதாக செய்திகள் கிளம்பின. இதையடுத்து ஜெயலலிதா வீட்டு முன்பத்திரிக்கையாளர்கள், புகைப்படக்காரர்கள் குழுமினர். ஆனால் கார்த்திக் வரவில்லை.

இந்தச் செய்தி பரவிய நேரத்தில் அவர் கோவையிலிருந்து விமானம் மூலம்சென்னைக்குப் பயணித்துக் கொண்டிருந்தார். சென்னை வந்திறங்கிய அவரிடம்,கூட்டணி குறித்து கேட்டபோது,

கூட்டணிக்குத் தயாராக இருப்பதாக அதிமுக தரப்புக்கு தெரிவித்து விட்டேன். ஆனால்இன்னும் அழைப்பு வரவில்லை. அது ஏன் என்று புரியவில்லை.

முதல்வரை சந்தித்து கூட்டணி தொடர்பாகப் பேச தயாராக உள்ளேன். அழைப்புவந்தவுடன் சந்திப்பேன், ஆனால் எப்போது அழைப்பு வரும் என்றுதான்தெரியவில்லை என்றார் கார்த்திக்.

சந்தானத்துடன் கார்த்திக் சமரசமாகப் போனால் மட்டுமே அவரை ஜெயலலிதாகூப்பிட்டு சீட் கொடுப்பார் எனத் தெரிகிறது.

அதிமுக கூட்டணியை கார்த்திக் உள்ளப்பூர்வமாக விரும்பாவிட்டாலும் அவரதுகட்சியான பார்வர்ட் பிளாக்கில் உள்ளவர்கள் அனைவருமே அதிமுக அபிமானிகள்.இதனால் கார்த்திக்குக்கு வேறு வழியும் இல்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+