பேங்க் கோபாலகிருஷ்ணன் சமாஜ்வாதி தலைவர்
சென்னை:
இந்தியன் வங்கி திவாலானதற்கு முக்கியக் காரணமாக கூறப்பட்ட அந்த வங்கியின்முன்னாள் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனரான கோபாலகிருஷ்ணன், தமிழகசமாஜ்வாதிக் கட்சித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்தியாவின் முன்னணி வங்கிகளில் ஒன்றாக திகழ்ந்த இந்தியன் வங்கி,கோபாலகிருஷ்ணன் தலைமையில் இயங்கியபோது பெரும் நஷ்டத்தை சந்தித்துதிவால் நிலைக்கு சென்றது.10 ஆண்டுகளுக்கு முன் சென்னைத் தொலைக்காட்சியில் இரண்டு விஷயங்கள்தவறாமல் இடம் பெறும். ஒன்று பஞ்சாயத்து ராஜ் நியூஸ். இன்னொன்றுகோபாலகிருஷ்ணன் விழாக்களில் பங்கேற்கும் நியூஸ்.
இப்படி நியூஸ்மேக்கராக விளங்கிய கோபாலகிருஷ்ணன், தனக்கு வேண்டியவர்கள்,சினிமாகாரர்கள், தனியார் என தன்னைப் புகழந்தவர்களுக்கு எல்லாம் ஏகப்பட்டகடன்களை அள்ளித் தந்தார். கொடுத்த கடன் திரும்பி வராமல் வங்கி பெரும்நஷ்டத்தை சந்தித்தது.
இதுதொடர்பாக கோபாலகிருஷ்ணன் மீது வழக்குகளும் தொடரப்பட்டன. பெரும்சிக்கலில் மாட்டிய இவரை மூப்பனன் தான் காப்பாற்றியதாக சொல்லப்படுவதுண்டு.
கோனார் சமுதாயத்தைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன் கடந்த தேர்தலின்போதேஅரசியலில் காலடி எடுத்து வைத்தார்.
2001ம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் கண்ணப்பனின் மக்கள் தமிழ் தேசம்கட்சியின் சார்பில் புவனகிரி தொகுதியில் போட்டியிட்டு டெபாசிட் இழந்தார். பின்னர்அதிமுகவில் சேர்ந்தார். ஆனால் கட்சியில் அவருக்கு முக்கியத்துவம்கிடைக்கவில்லை. பின்னர் அரசியலில் இருந்து ஒதுங்கி மீண்டும் யாதவ மகாசபையில்தீவிரமாக செயல்பட்டு வந்தார்.
இப்போது யாதவ மகாசபைத் தலைவராக கோபாலகிருஷ்ணன் உள்ளார்.
இந் நிலையில் இவரை சமாஜ்வாதிக் கட்சியின் தமிழக தலைவராக உ.பி. மாநிலமுதல்வரும், சமாஜ்வாதிக் கட்சித் தலைவருமான முலாயம் சிங் யாதவ்நியமித்துள்ளார்.
தமிழகத்தில் கட்சியை வளர்க்கும் விதமாக கோபாலகிருஷ்ணனை தலைவராகநியமித்துள்ளதாக முலாயம் கூறியுள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications