தேர்தலில் அதிமுகவை தூக்கி எறிவோம்: மொய்லி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
ஜனநாயக மற்போக்குக் கூட்டணியின் அத்தனை வேட்பாளர்களும் அமோகவெற்றிபெறுவார்கள். அதிமுக ஆட்சி தூக்கி எறியப்படும் என தமிழகத்திற்கானகாங்கிரஸ் கட்சியின் பொறுப்பாளர் வீரப்ப மொய்லி கூறியுள்ளார்.
காங்கிரஸ் கட்சிக்கு திமுக கூட்டணியில் 48 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதைத்தொடர்ந்து இன்று சென்னை வந்த மொய்லி அண்ணா அறிவாலயத்தில்கருணாநிதியை சந்தித்து நன்றி தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர்பேசுகையில்,காங்கிரஸ் கட்சிக்கு 48 தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருப்பது எங்களுக்கு பூரணதிருப்தியை அளித்துள்ளது. இதற்காக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி போன்மூலம் கருணாநிதிக்கு நன்றி தெரிவித்தார்.
நான் நேரில் வாழ்த்து தெரிவிக்க வந்தேன். 234 தொகுதிகளிலும் ஜனநாயகமுற்போக்குக் கூட்டணி வெற்றி பெறும். அதிமுக ஆட்சி வரும் தேர்தலில் தூக்கிஎறியப்படுவது உறுதி.
அந்த நோக்கத்துடன் கூட்டணிக் கட்சிகள் அனைத்தும் தீவிரமாக செயல்படும்என்றார். மொய்லியுடன் காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி உள்ளிட்டோரும்வந்திருந்தனர்.












Click it and Unblock the Notifications