திமுகவுக்கு மிஞ்சியது 131 தொகுதிகள் மட்டுமே
சென்னை:
கூட்டணிக் கட்சிகளுக்கு 103 தொகுதிகளை ஒதுக்கியுள்ள திமுக மீதமுள்ள 131தொகுதிகளில் மட்டுமே போட்டியிடவுள்ளது.
தமிழகத்தில் 234 சட்டசபைத் தொகுதிகள் உள்ளன. திமுக கூட்டணியில்இடம்பெற்றுள்ள கூட்டணிக் கட்சிகளில்,காங்கிரஸ் - 48, பாமக - 31, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் - 13, இந்திய கம்யூனிஸ்ட் -11, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் - 3 என தொகுதிப் பங்கீடு முடிந்துள்ளது.
இதில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி வேட்பாளர்கள் திமுகவின் உதயசூரியன்சின்னத்தில்தான் போட்டியிடப் போகிறார்கள். எனவே அவர்களும் திமுகவேட்பாளர்களாகவே கருதப்படுவார்கள்.
எனவே, முஸ்லீம் லீக் கட்சியைத் தவிர்த்து மொத்தம் 103 இடங்களில் திமுககூட்டணிக் கட்சி வேட்பாளர்கள் போட்டியிடவுள்ளனர்.
மீதம் இருப்பது 131 தொகுதிகள் தான். இந்தத் தொகுதிகளில் திமுக போட்டியிடுகிறது.ஆட்சியமைக்க 117 இடங்கள் வேண்டும்.
சில குட்டிக் கட்சிகளுக்கு திமுக சார்பில் தொகுதிகள் ஒதுக்கினாலும் கூட அவர்கள்அனைவரும் உதயசூரியன் சின்னத்தில்தான் போட்டியிட வைக்கப்படுவார்கள்.
எனவே மொத்தமாக 131 தொகுதிகளில் திமுக களத்தில் நிற்கவுள்ளது.












Click it and Unblock the Notifications