சன் டிவிக்கு பிஎஸ்என்எல் விளம்பரம்: புது வழக்கு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

மத்திய அமைச்சர் தயாநிதி மாறனின் குடும்பத்திற்குச் சொந்தமான சன் டிவி குழுமசேனல்கள், பத்திரிகைகளில் மட்டும் பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் விளம்பரம்தொடர்ந்து வழங்கப்பட்டது தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்றுகோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சென்னை புரசைவாக்கத்தைச் சேர்ந்த வேப்பரசு என்பவர் தாக்கல் செய்துள்ளமனுவில், மத்திய தொலைத்தொடர்பு அமைச்சராக தயாநிதி மாறன் வந்த பின்னர்,அவரது சகோதரர் கலாநிதி மாறனுக்குச் சொந்தமான சன் டிவி குழுமத்தைச் சேர்ந்த 15தொலைக்காட்சி அலைவரிசைகள்,

அவர்களுக்குச் சொந்தமான முரசொலி, குங்குமம், தமிழ் முரசு, தினகரன் உள்ளிட்டவார, நாளிதழ்கள், சூரியன் எப்.எம். வானொலியில் ஆகியவற்றில் மட்டும்பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் விளம்பரம் தொடர்ந்து வழங்கப்பட்டுள்ளது.

இந்த வகையில் மட்டும் தயாநிதி மாறன், கலாநிதி மாறன் குடும்பத்தினர் ரூ. 10 கோடிவரை சம்பாதித்துள்ளனர். வேறு எந்தத் தொலைக்காட்சி நிறுவனங்களுக்கும் இந்தவிளம்பரங்கள் வழங்கப்படவில்லை.

எனவே இதுகுறித்து சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்றுகோரியுள்ளார்.

இந்த மனு நீதிபதிகள் கற்பகவிநாயகம், ஏ.ஆர்.ராமலிங்கம் ஆகியோர் முன்விசாரணைக்கு வந்தது. விசாரணையை ஏப்ரல் 13ம் தேதிக்கு நீதிபதிகள்ஒத்திவைத்தனர்.

டெலிபோன் பில்லில் கருணாநிதி:

இதற்கிடையே பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் செல்போன் வாடிக்கையாளர்களுக்குஅனுப்பப்பட்டுள்ள பில்லுடன், திமுக தலைவர் கருணாநதி, காங்கிரஸ் தலைவர்சோனியா காந்தி ஆகியோரின் படங்களுடன் கூடிய விளம்பரமும்அனுப்பப்பட்டுள்ளது குறித்து விசாரிக்கப்படும் என தலைமைத் தேர்தல் அதிகாரிநரேஷ்குப்தா தெரிவித்துள்ளார்.

செல்ஒன் செல்போன் வாடிக்கையாளர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள கடந்த மாதபில்லுடன், பலவண்ணத்தில் அச்சிடப்பட்ட ஒரு விளம்பரமும்இணைக்கப்பட்டுள்ளது.

இதில் பிரதமர் மன்மோகன் சிங், திமுக தலைவர் கருணாநதி, சோனியா காந்தி, மத்தியதகவல் தொடர்புத்துறை அமைச்சர் தயாநிதி மாறன் ஆகியோர் படங்கள்இடம்பெற்றுள்ளன.

விளம்பரத்தின் தலைப்பாக சொன்னதைச் செய்வோம் என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது. மேலும் அதிலேயே செல்ஒன் செல்போன் கட்டண விவரங்கள் கீழேஇடம்பெற்றுள்ளது.

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும்போது வாக்காளர்களை கவரும்வகையில் இதுபோல விளம்பரத்தை பி.எஸ்.என்.எல். நிறுவனம் அனுப்பியிருப்பதுநடத்தை விதிகளை மீறிய செயல் என்று கூறி தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ்குப்தாவுக்கு அதிமுகவிடம் இருந்து புகார்கள் வந்தன.

இதுகுறித்து குப்தா கூறுகையில், இந்த விளம்பரம் தொடர்பாக பி.எஸ்.என்.எல்.நிறுவனத்திடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

இந்த விளம்பரம், மார்ச் 1ம் தேதிக்கு (தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட தினத்திற்கு)முன்பாக வாடிக்கையாளர்களை சென்றடைந்தது என்பதை பி.எஸ்.என்.எல். நிறுவனம்உறுதிப்படுத்த வேண்டும். அப்படி இல்லாவிட்டால், தேர்தல் நடத்தை விதிகளை மீறியசெயலாக அது கருதப்படும். அதுதொடர்பான உரிய நடவடிக்கைகள்மேற்கொள்ளப்படும்.

அதே போல டாக்டர்கள் தேர்வு முடிவை வெளியிடவும் தமிழக அரசுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் 10ம் தேதி வரை புகைப்பட அடையாள அட்டை வழங்கும் பணிநீட்டிக்கப்பட்டுள்ளது. தற்போது 1,233 மையங்களில் இந்தப் பணிகள் நடந்துவருகின்றன என்றார் நரேஷ் குப்தா.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+