தேர்தலில் குதிக்கிறது வணிகர் சங்கம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை சட்டசபைத் தேர்தலில் 234 தொகுதிகளிலும்தனித்துப் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளது.
பேரவையின் பொதுக் குழுக் கூட்டம் திருச்சியில் நடந்தது. மாநிலத் தலைவர்வெள்ளையன் தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில் தேர்தலில் ஆதரவு யாருக்குஎன்பது குறித்து விவாதம் நடந்தது.
விவாதத்திற்குப் பின்னர் வெள்ளையன் செய்தியாளர்களிடம் பேசுகையில், நாட்டுநலன் கருதியும், பொதுமக்கள் நலன் கருதியும் வரும் தேர்தலில் பேரவை சார்பில்வேட்பாளர்களை நிறுத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
234 தொகுதிகளிலும் எங்களது வேட்பாளர்கள் நிறுத்தப்படுவார்கள் என்றார்.












Click it and Unblock the Notifications