திமுகவுக்கு திராவிடர் கழகம் ஆதரவு
Subscribe to Oneindia Tamil
தஞ்சாவூர்:
வரும் சட்டசபைத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு தருவதாக திராவிடர் கழகம்அறிவித்துள்ளது.
தஞ்சாவூரில் திராவிடர் கழக பொதுக்குழுக் கூட்டம் நடந்தது. இக் கூட்டத்தில் திமுககூட்டணிக்கு ஆதரவு தெரிவிப்பது என முடிவு செய்து தீர்மானம்நிறைவேற்றப்பட்டது.இதுகுறித்து திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி செய்தியாளர்களிடம் கூறுகையில்,
கடந்த ஐந்து ஆண்டுகளாக நடந்து வரும் அதிமுக ஆட்சியில் கொடுத்த வாக்குறுதிகள்எதுவும் நிறைவேற்றப்படவில்லை. எனவே வரும் சட்டசபைத் தேர்தலில் திராவிடர்கழகம் அதிமுகவை ஆதரிக்காது.
அனைத்து சாதியினரையும் கோவில் அர்ச்சகர்களாக்குவோம் என்று திமுக தலைவர்கருணாநிதி அறிவித்துள்ளார். அதற்காக அவரை திராவிடர் கழகம் பாராட்டுகிறது.
வரும் தேர்தலில் திமுக கூட்டணியின் வெற்றிக்காக திராவிடர் கழகம் பாடுபடும்என்றார் வீரமணி.












Click it and Unblock the Notifications