மீண்டும் பறவை காய்ச்சல்: பீதியில் தமிழகம்
சென்னை:
மீண்டும் பறவைக் காய்ச்சல் தாக்குதல் ஏற்பட்டுள்ளதால், மகாராஷ்டிரம் உள்ளிட்டவெளி மாநிலங்களிலிருந்து கோழிகள், முட்டைகளை கொண்டு வருவதற்கு தமிழகஅரசு தடை விதித்துள்ளது.
மகாராஷ்டிர மாநிலத்தில் சமீபத்தில் 2 மாவட்டங்களில் பறவைக் காய்ச்சல் பரவியது.இதைத் தொடர்ந்து நாடு முழுவதும் பெரும் பீதி ஏற்பட்டது. இந்த பீதி கொஞ்சம்கொஞ்சமாக அகன்று வரும் நிலையில், தற்போது மகாராஷ்டிர மாநிலம் ஜல்கோவான்மாவட்டத்தில் நான்கு கிராமங்களில் பறவைக் காய்ச்சல் தாக்கியுள்ளதுகண்டுபிடிக்கப்பட்டது.இதைத் தொடர்ந்து அப் பகுதியில் 1லட்சத்திற்கும் மேற்பட்ட கோழிகளைக் கொல்லஉத்தரவிடப்பட்டுள்ளது. இதையடுத்து மகாராஷ்டிரம் உள்ளிட்ட வெளிமாநிலங்களிலிருந்து கோழிகள், முட்டைகளை கொண்டு வருவதற்கு தமிழக அரசுதடை விதித்துள்ளது.
இதுகுறித்து தமிழக அரசின் கால்நடை பராமரிப்புத் துறை இயக்குனர் பழனிவேலுகூறுகையில்,
மகாராஷ்டிரத்தில் ஏற்பட்ட பறவைக் காய்ச்சல் காரணமாக கடந்த மாதம் வெளிமாநிலங்களிலிருந்து தமிழகத்திற்குள் கோழி, முட்டை ஆகியவற்றை கொண்டு வரத்தடை விதிக்கப்பட்டது. அந்தத் தடை அப்படியே நீடிக்கிறது.
மகாராஷ்டிரத்திலிருந்து இங்கோ அல்லது இங்கிருந்து அங்கோ கோழிகளை கொண்டுசெல்ல, வாங்க தடை விதிக்கப்பட்டுள்ளதால், தமிழகத்திற்குள் பறவைக் காய்ச்சல்பரவுவதற்கான வாய்ப்பே இல்லை.
தமிழகத்தில் உள்ள கோழிப் பண்ணைகளில் உள்ள கோழிகளின் ரத்தம் முறையாகபரிசோதிக்கப்பட்டுள்ளது. அதில், தமிழகத்தில் உள்ள கோழிகளுக்கு பறவைக்காய்ச்சல் வைரஸ் தாக்கவில்லை என்பது தெரிய வந்துள்ளது.
எனவே தமிழகத்தில் பறவைக் காய்ச்சல் இல்லை. தற்போது மீண்டும்மகாராஷ்டிரத்தில் பறவைக் காய்ச்சல் தாக்கியுள்ளதால் முன்னெச்சரிக்கைநடவடிக்கைகளை மீண்டும் தீவிரப்படுத்த உத்தரவிட்டுள்ளோம்.
நாமக்கல், ஈரோடு, சேலம், கடலூர், கோவை ஆகிய மாவட்டங்களில்தான் அதிகஅளவில் கோழிப் பண்ணைகள் உள்ளன. அங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்,கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இவை தவிர தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் கால்நடை மருத்துவர்கள்தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். எனவே தமிழக மக்கள் பீதி அடையத்தேவையில்லை, வழக்கம் போல கோழி, முட்டைகளை சாப்பிடலாம் என்றார்பழனிவேலு.












Click it and Unblock the Notifications