ஜெவுக்கு நோபல் கேட்கும் விஜய் பிரபாகரன்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
அமைதிக்கான நோபல் பரிசுக்கு முதல்வர் ஜெயலலிதாவின் பெயரை, விஜய்பிரபாகரன் என்ற அதிமுக அனுதாபி நடத்தி வரும் உலகத் தமிழ் இளைஞர்கள்கூட்டமைப்பு பரிந்துரை செய்துள்ளது.
உலகத் தமிழ் இளைஞர்கள் கூட்டமைப்பு என்ற அமைப்பின் தலைவராக உள்ளவர்விஜய் ஜி. பிரபாகரன். ஜெயலலிதாவின் தீவிர ரசிகரான இவர், ஜெயலலிதாவின்பெயரில் விருதுகளை வழங்கி வருகிறார்.கடந்த முறை ஜெயலலிதா ஆட்சியில் இருந்தபோது அமெரிக்காவில் ஒரு தனியார்தெருவுக்கு ஜெயலலிதாவின் பெயரைச் சூட்டி பரபரப்பை ஏற்படுத்தியவர்.இந் நிலையில் இன்னும் ஒரு படி மேலே போய், முதல்வர் ஜெயலலிதாவின் பெயரை,உலக அமைதிக்கான நோபல் பரிசுக்கு பரிந்துரைத்துள்ளார்.இதுதொடர்பாக பிரபாகரன் செய்தியாளர்களிடம் பேசுகையில்,பெண்கள் முன்னேற்றம், பாலின பாகுபாட்டை அகற்றும் பணி ஆகியவற்றில்முதல்வர் ஜெயலலிதா மிகப் பெரும் சாதனைகளைப் படைத்துள்ளார். பல்வேறுபுதுமையான திட்டங்களின் கீழ் பெண்களின் மேம்பாட்டுக்காகப் பாடுபட்டுள்ளார்.சுனாமி தாக்குதல், மழை, வெள்ளம் போன்ற பேரிடத் துயர் சம்பவங்களை மிகத்திறமையாக கையாண்டு மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மிகச் சிறப்பாகமேற்கொண்டார்.எங்களது அமைப்பின் இந்தியப் பிரிவு மட்டுமல்லாமல் அமெரிக்கா, ஷார்ஜாஉள்ளிட்ட உலக நாடுகளில் உள்ள கிளைகளும் ஜெயலலிதாவின் பெயரைஅமைதிக்கான நோபல் பரிசுக்காகப் பரிந்துரைத்துள்ளன.ஏப்ரல் 14ம் தேதி, தமிழ் புத்தாண்டு தினத்தை ஜெயலலிதா தினமாகக் கொண்டாடவும்நாங்கள் முடிவு செய்துள்ளோம் என்றார் விஜய் ஜி. பிரபாகரன்.தேர்தல் வருது.. அய்யா ஒரு சீட்டுக்கு அடி போடுகிறாரோ?











Click it and Unblock the Notifications