கோஷ்டி இல்லாத கட்சி அதிமுக-நெல்லை கண்ணன்

Subscribe to Oneindia Tamil

திருநெல்வேலி:

கருணாநதி, தயாநதி மாறன் சொல்படிதான் சோனியா காந்தி செயல்படுகிறார், ராஜீவைஎதிர்த்த கருணாநிதியின் வீட்டுக்கும், திமுக அலுவலகத்திற்கும் அவர் செல்வதுஉண்மையான காங்கிரஸ்காரர்களுக்கு பெரும் வேதனை அளித்துள்ளது என்று பிரபலபேச்சாளரும், காங்கிரஸ் கட்சிப் பிரமுகருமான நெல்லை கண்ணன் குமுறியுள்ளார்.

காங்கிரஸ் கட்சியில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்து வரும் நெல்லை கண்ணன்,சிறந்த பேச்சாளர், நல்ல இலக்கியவாதி, பட்டிமன்றங்களில் நல்ல தமிழால்அனைவரையும் கவர்பவர்.

ஆன்மீகம், அரசியல், இலக்கியம் என பல்துறைகளில் நிபுணத்துவம் பெற்றவர். கடந்த1996ம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் சேப்பாக்கம் தொகுதியில்கருணாநிதியை எதிர்த்துப் போட்டியிட்டுத் பெரும் தோல்வியைத் தழுவினார்.

இந் நிலையில் வரவிருக்கிற தேர்தலில் அதிமுகவுக்காக தீவிரப் பிரசாரம் செய்யப்போவதாக கண்ணன் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், 43 வருடங்களாக காங்கிரஸ்கட்சியில் இருந்து வருகிறேன். நெடுமாறன், மூப்பனார், வாழப்பாடி ராமமூர்த்திஆகியோரெல்லாம் கட்சியை விட்டு வெளியேறியபோதும் கூட நான் வெளியேபோனதில்லை. தொடர்ந்து காங்கிரஸில்தான் இருந்து வருகிறேன்.

கட்சியும், நேரு குடும்பம் எனக்கு உயிர். அப்படிப்பட்ட பாரம்பரியம் மிக்ககுடும்பத்தின் மருமகளாகவும், காங்கிரஸ் கட்சியின் தலைவியாகவும் உள்ள சோனியாகாந்தி, சென்னைக்கு நான்கு முறை வந்துள்ளார்.

ஆனால் ஒருமுறை கூட காமராஜர் வாங்கி வைத்த சத்தியமூர்த்தி பவனுக்கோ, ராஜீவ்காந்தி அவர்களால் திறந்து வைக்கப்பட்ட தேனாம்பேட்டை காமராஜர் அரங்கத்திற்கோசென்றதில்லை.

ஆனால் ராஜீவ் காந்தியை கடுமையாக எதிர்த்த திமுக தலைவரின் வீட்டுக்கும், அவரதுகட்சி அலுவலகத்திற்கும் அவர் போகிறார். இது என்னைப் போன்ற உண்மையானகாங்கிரஸ்காரர்களுக்கு வேதனை அளிக்கிறது.

சோனியா காந்தியின் அருகில் யார் இருக்கிறார்கள்.? ப.சிதம்பரமோ,கிருஷ்ணசாமியோ இல்லை, கருணாநிதியும், அவரது பேரன் தயாநிதி மாறனும்தான்இருக்கிறார்கள். தயாநிதி மாறன் சொல்லிக் கொடுப்பதை, எழுதிக் கொடுப்பதைத்தான்சோனியா பேசுகிறார்.

இந்திரா காந்திக்கு எதிராக செயல்பட்டவர்கள்தான் இன்று சோனியா காந்திக்குநெருக்கமானவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் கொடுக்கும் தவறானதகவல்களையே பேசி வருகிறார் சோனியா.

கருணாநிதி கொடுக்கக் கூடாது என்றதால் தமிழக அரசுக்கு சுனாமி, வெள்ள நிவாரணநதியைக் கொடுக்க மறுக்கிறார் சோனியா காந்தி.

தமிழக காங்கிரஸ் கருணாநிதி காங்கிரஸாகவும், தயாநிதி மாறன் காங்கிரஸாகவும்மாறி வெகு நாளாகி விட்டது.

இப்போது கட்சியில் இருப்பவர்கள் யாரும் உண்மையான காங்கிரஸ்காரன் கிடையாது,எல்லோரும் கட்சி மாறிகள், சுயநலக்காரர்கள். எனவேதான் என்னைப் போன்றஉண்மையான காங்கிரஸ்காரர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள்.

வாரிசு அரசியல் நடத்தும் கட்சி என்று திமுகவை சொல்கிறோம், ஆனால் திமுகவைவிஞ்சும் அளவுக்கு காங்கிரஸிலும் வாரிசு அரசியல் தலைவிரித்தாடுகிறது. மக்கள்தத்துவத்திற்கு எதிராக செயல்படுகிறார் கருணாநிதி.

2001ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்டு வென்ற கருணாநிதி,சட்டசபைக்கு ஒரு நாள் கூட போனதில்லை. மக்கள் பிரச்சினைகளை அவர் பேசத்தயாராக இல்லை. அவருக்கு கவலையே இல்லை.

அப்படிப்பட்ட கருணாநதி, தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு வேறு ஒருவரைசேப்பாக்கத்தில் நிறுத்தி வெற்றி பெற வைத்திருக்க வேண்டும்.

திமுகவுக்கும், காங்கிரஸுக்கும் ஒரே ஒரு வித்தியாசம்தான். திமுகவில் கோஷ்டிகள்உண்டு, ஆனால் கோஷ்டிகளுக்காகவே தான் காங்கிரஸே இருக்கிறது.

ஆனால் இப்படி எந்தப் பிரச்சினையும் இல்லாத ஒரே கட்சி அதிமுக மட்டுமே. மேலும்மக்கள் நலனுக்காக 20 மணி நேரத்திற்கும் அதிகமாக உழைத்து வருகிறார் முதல்வர்ஜெயலலிதா.

அவரைப் போல சட்டசபையில் புள்ளி விவரங்களை எடுத்து வைத்துஆணித்தரமாகவும், மிகவும் ஈடுபாட்டுடனும் பேசிய தலைவரை இதுவரை நான்பார்த்ததில்லை.

இதேபோல அதிமுக கூட்டணியில் இணைந்துள்ள கட்சிகளைப் பாருங்கள், மதிமுக.இக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ ஒரு உன்னதமான தலைவர். தனது மகனைஅரசியல் வாடையே படாமல் வளர்த்து வருகிறார்.

தனது மகனை எந்த வழியிலும் அரசியலுக்குள் திணிக்க அவர் முயற்சிக்கவில்லை.

அதேபோலத்தான் திருமாவளவனும். சுயநலம் இல்லாத தலைவர்களில் அவரும்ஒருவர். உண்மையான உழைப்பாளி, தலித் போராளி. எனவேதான் எனக்கு அதிமுககூட்டணியைப் பிடித்து விட்டது.

வரும் தேர்தலில் அதிமுக கூட்டணிக்காக தீவிரப் பிரசாரம் செய்யப் போகிறேன்.முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டால் சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டுகருணாநிதியை வெல்வேன். (இப்ப தான் பாயிண்டுக்கே வர்றாரு கண்ணன், சீட்வேணுமாம்.. அதுக்கு தான் இவ்வளவு பேச்சு)

வேறு எந்தத் தொகுதியில் அவர் போட்டியிட்டாலும் அவரை எதிர்த்துப் போட்டியிடத்தயாராக இருக்கிறேன் என்றார் கண்ணன்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+