மார்க்சிஸ்ட் தொகுதிகள்: திமுகவுடன் உடன்பாடு!

Subscribe to Oneindia Tamil

சென்னை:

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கான 13 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டு விட்டன.இதுதொடர்பான ஒப்பந்தத்தில் திமுக தலைவர் கருணாநிதியும், மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் வரதராஜனும் இன்று கையெழுத்திட்டனர்

திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 13 இடங்கள் ஒதுக்கப்பட்டன.இந்த தொகுதிகள் எவை என்பது குறித்து பேச்சுவார்த்தை நடந்தது.பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு இன்று இரு தரப்பினரும்கையெழுத்திட்டனர்.

இன்று காலை அண்ணா அறிவாலயத்தில் கருணாநிதியும், வரதராஜனும் ஒப்பந்தத்தில்கையெழுத்திட்டனர்.

மற்ற கட்சிகளுடனும் இதேபோல ஒப்பந்தம் கையெழுத்தான பின்னர் மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடும் தொகுதிகளின் பெயர்கள் வெளியிடப்படும் எனகருணாநிதி தெரிவித்தார்.

கருணாநிதி-பிரகாஷ் காரத் சந்திப்பு:

முன்னதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியப் பொதுச் செயலாளர் பிரகாஷ்காரத் இன்று கருணாநிதியை சந்தித்துப் பேசினார். அப்போது வரதராஜன், ஸ்டாலின்,ஆற்காடு வீராசாமி, மத்திய அமைச்சர் ராஜா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் காரத் பேசுகையில், கூட்டணிக் கட்சிகள் அனைத்தையும்ஒருங்கிணைத்து, மிகச் சுமூகமாக தொகுதிப் பங்கீட்டை முடித்துவிட்டார் கருணாநிதி. இதற்காக அவருக்கு நன்றிதெரிவிக்கவே அவரை சந்தித்தேன்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 13 தொகுதிகளை ஒதுக்கியதற்காக கருணாநிதிக்குநன்றி.

திமுக கூட்டணியின் வெற்றிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் முழு அளவில்ஒத்துழைக்கும் என்று உறுதியளித்தேன். சட்டசபைத் தேர்தலுக்குப் பின்னர் புதியஅரசை உருவாக்க ஒன்றிணைந்து செயல்படுவோம் என்றார்.

பின்னர் கருணாநிதி பேசுகையில், கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிகள் ஒதுக்கீடுதொடர்பான பேச்சுக்கள் மிகச் சுமூகமாக நடந்து வருகிறது. இன்னும் 2 அல்லது 3நாட்களில் முழுமையான தொகுதிகள் பட்டியல் வெளியிடப்படும். அதன் பின்னர்திமுக வேட்பாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்படும்.

காங்கிரஸ் கட்சியிலிருந்து இன்று இரவு அல்லது நாளை காலை பட்டியலுடன்வருவார்கள் என எதிர்பார்க்கிறோம்.

சென்னை மாநிகர காவல்துறை ஆணையர் நிடராஜ் இடமாற்றம் தொடர்பாக தேவாரம்உள்ளிட்டவர்கள் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளதை, நானும் ஒருபார்வையாளனாக இருந்து கவனித்து வருகிறேன்.

அரசு ஊழியர்கள் ஒரு குறிப்பிட்ட கட்சிககாக பிரசாரம் செய்யக் கூடாது என்று தேர்தல்ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ஆரம்பத்தில் கறாராகததான் அறிவிப்பார்கள். ஆனால்நடைமுறையில் அப்படி இருப்பதில்லை என்றார் கருணாநிதி.

முன்னதாக பெரம்பூரில் நேற்றிரவு நடந்த மார்க்சிஸ்ட் பொதுக் கூட்டத்தில் பேசிய காரத்,

பெரம்பூர் தொகுதியின் இப்போதைய மார்சிஸ்ட் எம்எல்ஏ மகேந்திரன் மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.இந்தத் தொகுதியில் மீண்டும் அவரே போட்டியிட்டு சட்டசபைக்குச் செல்வார் என்றார். இதன் மூலம் அந்தத்தொகுதியை மீண்டும் மார்க்சிஸ்டுக்கே திமுக ஒதுக்கியிருப்பது தெரிகிறது.

2001ம் ஆண்டில் இந்தத் தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் வென்றவர் மகேந்திரன் என்பதுகுறிப்பிடத்தக்கது. இது திமுகவின் பலம் வாய்ந்த தொகுதிகளில் ஒன்று. இங்கு 10 முறை திமுக வென்றுள்ளதுகுறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+