மேலும் 5 அதிமுக ஆதரவு போலீஸ் அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணையம் கத்தி?
சென்னை:
சென்னை மாநகர காவல்துறை ஆணையர் நடராஜைத் தொடர்ந்து மேலும் ஐந்துஅதிகாரிகளை இடமாற்றம் செய்ய தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள்வெளியாகியுள்ளன.
முதல்வர் ஜெயலலிதாவைப் போல ஒரு தலைவர் இல்லை என்று அதிமுக மாவட்டச்செயலாளர் போல ஜால்ரா அடித்து சிக்கலில் மாட்டிக் கொண்டுள்ளார் நடராஜ்.அவரை இடமாற்றம் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.தற்போது அதை எதிர்த்து மாஜி டிஜிபிக்கள் தேவாரமும் பரமகுருவும் நீதிமன்றத்தில்வழக்கு தொடர்ந்துள்ள நிலையில் 23ம் தேதி வரை இந்த இடமாற்ற உத்தரவு நிறுத்திவைக்கப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இந் நிலையில், சென்னை நகரில் பணியாற்றி வரும் மேலும் சில அதிகாரிகள்,திண்டுக்கல் மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர் கந்தசாமி ஆகியோரையும்இடமாற்றம் செய்ய தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாக வட்டாரங்கள்தெரிவிக்கின்றன.
சென்னை மாநகர காவல்துறையில் துணை ஆணையர்களாக பணியாற்றி வரும்தாமரைக்கண்ணன், கலியமூர்த்தி, பாலதண்டாயுதபாணி, கூடுதல் ஐ.ஜி.சண்முகராஜேஸ்வரன், திண்டுக்கல் மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர்கந்தசாமி ஆகியோர் இடமாற்றப் பட்டியலில் உள்ளதாக கூறப்படுகிறது.
இதில் கந்தசாமி, பொதுப்பணித்துறை அமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தின் சம்பந்திஆவார்.
இந்த ஐந்து பேரும் ஆளும் கட்சிக்கு சாதகமாக நடந்து வருவதாக தேர்தல்கமிஷனுக்கு புகார் போயுள்ளது. இது குறித்து தேர்தல் ஆணையம் விசாரணையும்நடத்தி முடித்துவிட்டது.
இதையடுத்து இந்த அதிகாரிகளை இடமாற்றம் செய்து அவர்களுக்கு டம்மி பதவியைவழங்க தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் காவல்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையே, சென்னை மாநகர ஆணையர் பதவியில் தற்போது நடராஜ் நீடிக்கிறார்.அவர் ஒருவேளை மாற்றப்படுவதாக இருந்தால், கூடுதல் டிஜிபி லத்திகா சரண்அப்பதவியில் நியமிக்கப்படுவார் எனத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications