கம்யூனிஸ்ட் போட்டியிடும் தொகுதிகள் எவை?
Subscribe to Oneindia Tamil
சென்னை:
திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள்போட்டியிடக் கூடிய தொகுதிகள் எவை என்ற தகவல் கசிந்துள்ளது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கான 13 தொகுதிகளையும் திமுக ஒதுக்கி விட்டது.அதேபோல, இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கான 10 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுவிட்டன.அனைத்துக் கட்சிகளுடனும் உடன்பாடு ஏற்பட்ட பிறகு தொகுதிகள் விவரத்தைஅறிவிக்க திமுக முடிவு செய்துள்ளது.
மார்க்சிஸ்ட் கட்சிக்கு கீழ்கண்ட தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.அதன் விவரம்:
விளவங்கோடு,திருவட்டார், மதுரை கிழக்கு, சிங்காநல்லூர், பெரம்பூர்,திருப்பரங்குன்றம், வாசுதேவநல்லூர், குடியாத்தம், நாகப்பட்டனம், சிதம்பரம்,திருப்பூர், உளுந்தூர்பேட்டை, திண்டுக்கல் ஆகியவை.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு நன்னிலம், மன்னார்குடி, பெருந்துறை, அவினாசி,திருத்துறைப்பூண்டி, தளி, ஆலங்குடி, கோவில்பட்டி, சிவகங்கை, ஸ்ரீபெரும்புதூர்ஆகியவை ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவாலயத்துக்கு நெருக்கமான வட்டாரங்கள்தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications