கார்த்திக்-விஜய்காந்த்-டிஆர்: எந்தப் பக்கம்?
சென்னை:
சந்தானம் மூலம் தன்னை மூக்கறுத்த அதிமுகவுடன் கூட்டணி வேண்டாம், தனித்தே போட்டியிடுவோம் என்றமுடிவுக்கு வந்துவிட்டாாரம் கார்த்திக்.
சந்தானத்தை தனியே அழைத்து ஒரு சீட் கொடுத்ததன் மூலம் பார்வர்ட் பிளாக்கை உடைத்துவிட்டார் முதல்வர்ஜெயலலிதா. அதன் தலைவராக நியமிக்கப்பட்ட கார்த்திக் இத்தனை நாட்களாக அதிமுக அழைப்புக்காககாத்திருந்தும் கூட பலன் ஏற்படவில்லை.நடராஜன் மூலமாக முயன்றும் ஏதும் நடக்கவில்லை. இதையடுத்து தனித்துப் போட்டியிடும் முடிவுக்குவந்துவிட்டார் கார்த்திக். திமுக கூட்டணியை தனது கட்சியின் முக்கிய ஆதரவாளர்களான முக்குலத்தோர்விரும்பவில்லை என்பதால் அந்த ரிஸ்கையும் கார்த்திக் தவிர்க்க முடிவு செய்துவிட்டார்.
சமீபத்தில் மாநிலக் கட்டிக் கூட்டத்தைக் கூட்டிய கார்த்திக் இதைத் தெரிவித்ததோடு 60 தொகுதிகளில் தனியேகளமிறங்கும் முடிவில் இருக்கிறார் என்கிறார்கள்.
தன்னை போயஸ் கார்டன் அசிங்கப்படுத்திவிட்டதாகவும், கட்சியின் தலைவரான பிஸ்வாஸை தாக்க முயன்றசந்தானத்தோடு தான் கூட்டணி பேச கார்டனுக்குள் வர வேண்டும் என்றும் தனக்கு அதிமுக தலைமை நிபந்தனைவிதித்ததாகவும் கூறுகிறார் கார்த்திக்.
விஜய்காந்த்:
விஜய்காந்தை வளைக்க அதிமுக எவ்வளவோ முயன்றது. கூட்டணிக் கட்சிகளுக்குப் போக இப்போது அதிமுக180 தொகுதிகளில் போட்டியிடும் திட்டத்தில் உள்ளது.
இந் நிலையில் விஜய்காந்தையும் சேர்த்துக் கொண்டால் அவருக்கு 18 தொகுதிகள் வரை தர அதிமுக தயாராகஉள்ளது.
ஆனால், கூட்டு சேர 40 தொகுதிகள் வேண்டும் என விஜய்காந்த் நிபந்தனை விதிக்கவே அதிமுக விலகிக்கொண்டுவிட்டது. இதையடுத்துத் தான் கூட்டணியில் மட்டுமல்ல, தேர்தலுக்குப் பின் ஆட்சியிலும் பங்குவேண்டும் என பேச ஆரம்பித்துவிட்டார் விஜய்காந்த் என்கிறார்கள்.
டி.ஆரு...
அதே போல எனக்கு 3 சீட் என்று கடையில் மிட்டாய் கேட்பது போல அதிமுகவிடம் போய் தொகுதிப்பட்டியலைத் தந்து மூக்கறுபட்ட விஜய டி.ராஜேந்தரும் தனித்துப் போட்டியிடும் மூடில் இருப்பதாகசொல்கிறார்கள்.
லட்சிய திமுக நடத்தி வரும் இவரிடம் உங்களுக்கு ஒரு சீட் தான் என்று சொன்ன அதிமுக தேர்தல் பணிக்குழுவிடம் வசனம் பேசினார். இதையடுத்து உங்களுக்கு சீட் தருவது பத்தி முடிவெடுக்கல.. குடுப்பதாக இருந்தாநாங்களே கூப்பிடுவோம்.. சும்மா சும்மா இங்க வரப்படாது என்று கட்-அண்ட்-ரைட்டாக சொல்லப்பட்டுவிட்டது.
அப்படியே தந்தாலும் ஒரு சீட் தான் என்பதால் நாம பேசாம தனியாவே நிப்போமா என்று தனதுஆதரவாளர்களிடம் பேசி வருகிறாராம் டி.ஆர்.












Click it and Unblock the Notifications