For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இடியாப்ப சிக்கலில் அதிமுக-இதுவரை 9 சுத்து!

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

தொகுதிகளை ஒதுக்குவது தொடர்பாக அதிமுக, மதிமுக இடையே பெரும் மோதலும்இழுபறியும் நீடித்து வருகிறது.

இதுவரை இரு கட்சிகளும் 9 (முதல்வர் ஜெயலலிதாவுக்கு ராசியான எண்!) சுற்றுப்பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடும் எட்டப்படவில்லை.

இதையடுத்து மீண்டும் இரு கட்சியினரும் சந்தித்துப் பேசி இறுதி முடிவு எடுப்பார்கள்எனத் தெரிகிறது.

அதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 35 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த 35தொகுதிகளும் எவை என்பது தொடர்பாக இரு கட்சி தேர்தல் குழுக்களும் கூடி பேசிவருகின்றன.

8 முறை சந்தித்துப் பேசியும் உடன்பாடு ஏற்படாத நிலையில் செவ்வாய்க்கிழமை9வது முறையாக பேச்சுவார்த்தை நடந்தது.

அமைச்சர் ஓ.பி தலைமையிலான அதிமுக குழுவும், எல்.கணேசன் தலைமையிலானமதிமுக குழுவும் அதிமுக தலைமையகத்தில் சந்தித்துப் பேசினர்.

சுமார் ஒரு மணி நேரம் இந்தப் பேச்சுவார்த்தை நீடித்தது. பேச்சுவார்த்தைக்குப் பின்னர்வெளியே வந்த எல்.கணேசன் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

சுமூகமாகப் பேசி வருகிறோம். விரைவில் தொகுதிகள் இறுதி செய்யப்படும் என்றார்.இதையே இவர் சுமார் 9 முறை கூறிவிட்டது குறிப்பிடத்தக்கது.

பேச்சுவார்த்தையில் இழுபறி நீடிக்கிறதா என்று ஓ.பியிடம் கேட்டபோது,

இதுவரை நடந்த 9 சுற்றுப் பேச்சுவார்த்தையும் மிகவும் சுமூகமாகவும்,மகிழ்ச்சிகரமாகவும் (நெசமாவா?) நடந்து முடிந்துள்ளது.

விரைவில் புரட்சித் தலைவி, அம்மா அவர்கள் தொகுதிகளை அறிவிப்பார் என்றார்தனது அதே வழக்கமான புன்னகையுடன்.

கணேசனும், பன்னீர் செல்வம் இப்படிக் கூறினாலும் இரு கட்சிகளுக்கும் இடையேசில தொகுதிகளை இறுதி செய்வதில் பெரும் சிக்கல் நீடிப்பதாக கூறப்படுகிறது.

35 தொகுதிகளில் இதுவரை 10 தொகுதிகளுக்குக் கூட உடன்பாடு எட்டப்படவில்லைஎன்கிறார்கள். காரணம், மதிமுகவுக்கு ஏகப்பட்ட ரிசர்வ் தொகுதிகளை அதிமுகஒதுக்கியது தான். இதை ஏற்க வைகோ மறுத்து வருகிறார்.

இதையடுத்து இன்னும் ஒரு முறை இரு தரப்பினரும் சந்தித்துப் பேசுகின்றனர்.தொகுதிப் பங்கீட்டில் திமுக ஜெட் வேகத்தில் இருப்பதால் அதிமுகவும் சிக்கலைதீர்க்க தீவிரம் காட்டி வருகிறது.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தனது முடிவில் தீவிரமாக இருந்தால் அதிமுகஇறங்கி வரும் என்று தெரிகிறது.

அதே போல விடுதலைச் சிறுத்தைகளுடனும் சிக்கல் தொடர்கிறது. இரு முறைபேச்சுவார்த்தைகே வர மறுத்துவிட்ட விடுதலைச் சிறுத்தைகள் பொதுச் செயலாளர்திருமாவளவனை தாஜா செய்து பேச்சுவார்த்தையை தொடர்ந்து வருகிறது அதிமுக.

..அதிமுக சிக்கல்: மதிமுக-விசி கேட்கும் தொகுதிகள்

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X