பாண்டிச்சேரி: திமுகவுக்கு ஆப்பு வைக்கும் காங்

Subscribe to Oneindia Tamil

பாண்டிச்சேரி:

புதுவை சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் கூட்டணியில் இடம்பெறும் திமுகவுக்குஅதிகபட்சம் 9 தொகுதிகளே வழங்கப்படும் என்று காங்கிரஸ் கட்சி திட்டவட்டமாககூறி வருவதால் திமுக கடும் அதிருப்தி அடைந்துள்ளது.

தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் இடம் பெற்றுள்ளது.அக்கட்சிக்கு 48 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஆனால் புதுவையில் காங்கிரஸ்தலைமையிலான கூட்டணியில் திமுக இடம் பெற்றுள்ளது.

இந்தக் கூட்டணி தொடர்பாக சில நாட்களுக்கு முன்பு வரை உறுதியிலலாமல் இருந்துவந்தது. ஆனால் காங்கிரஸ் மேலிடப் பார்வையாளர் ஹரி பிரசாத் சென்னை வந்துகருணாநிதியை சந்தித்து கூட்டணி தொடருவதாக தெளிவுபடுத்தினார்.

இந் நிலையில் புதுவை தொகுதி உடன்பாடு குறித்த பூர்வாங்கப் பேச்சுக்கள்தொடங்கியுள்ளன. அதில் திமுகவுக்கு 9 சீட் வரை தருவதாக காங்கிரஸ் தரப்பில்தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் திமுகவினர் கடும் அதிருப்திக்குள்ளாகியுள்ளனர்.

தங்களுக்கு தனித்து போட்டியிட்டு ஆட்சியைப் பிடிக்கும் அளவுக்கு செல்வாக்குஇருப்பதாகவும், இருப்பினும் தமிழகத்தைப் போலவே புதுவையிலும் கூட்டணிதொடர வேண்டும் என்று விரும்புவதால் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியில்நீடிக்க முடிவு செய்திருப்பதாகவும் திமுக கூறுகிறது.

எனவே எங்களை மதித்து 15 தொகுதிகளாவது காங்கிரஸ் ஒதுக்க வேண்டும் என்றுதிமுக தரப்பில் வலியுறுத்தப்படுகிறது. ஆனால் இதை காங்கிரஸ் கட்சி ஏற்கவில்லை.

புதுவையைப் பொருத்தவரை இது காங்கிரஸ் கோட்டை. காலம் காலமாக காங்கிரஸ்தான் இங்கு ஆட்சியைப் பிடித்து வருகிறது. எனவே பாதிக்குப் பாதி தொகுதிகளை(மொத்த தொகுதிகளின் எண்ணிக்கை 30) திமுகவுக்கு ஒதுக்குவது இயலாத காரியம்என காங்கிரஸ் கூறுகிறது.

காங்கிரஸ் தரப்பில் 9 தொகுதிகள்தான் என்று திட்டவட்டமாக கூறி வருவதால் அங்குதொகுதி உடன்பாட்டில் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது. கடந்த 2001ம் ஆண்டு நடந்ததேர்தலில் காங்கிரஸ் தனி அணியாகவும், திமுக தனி அணியாகவும் போட்டியிட்டன.அதிமுக தனியாக போட்டியிட்டது.

கூட்டணிக்குக் கிடைத்த வாக்குகள் என்று பார்த்தால் திமுக கூட்டணிக்குத்தான் அதிகவாக்குகள் கிடைத்தன.

அக்கூட்டணி மொத்தம் 1,63,477 வாக்குகளைப் பெற்றது.

காங்கிரஸ் கூட்டணி 1,52,926 வாக்குகள் கிடைத்தன.

அதிமுகவுக்கு 96,214 வாக்குகள் கிடைத்தன.

காங்கிரஸ் கூட்டணியில் காங்கிரஸ் தவிர தமாகா, இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய இருகட்சிகள் மட்டுமே இருந்தன.

அதேசமயம் திமுக கூட்டணியில், புதுச்சேரி மக்கள் காங்கிரஸ், பாஜக, விடுதலைச்சிறுத்தைகள், ஐக்கிய ஜனதாதளம் என நிறையக் கட்சிகள் இருந்தன.

பாமகவுடன் சேர்ந்து அதிமுக தேர்தலை சந்தித்தது. பாமகவுக்கு அந்தத் தேர்தலில் ஒருசீட் கூட கிடைக்கவில்லை. ஆனால் அதிமுகவுக்கு 3 தொகுதிகளில் வெற்றிகிடைத்தது.

காங்கிரஸ் கூட்டணி 13 தொகுதிகளிலும், திமுக கூட்டணி 12 தொகுதிகளிலும் வெற்றிபெற்றன.

தற்போதைய தேர்தலில் 20 தொகுதிகளில் போட்டியிட காங்கிரஸ் விரும்புகிறது.மீதமுள்ள 10 தொகுதிகளை திமுக, பாமக, கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு ஒதுக்க முடிவுசெய்துள்ளது.

ஆனால் இதை திமுக ஏற்காமல் பிடிவாதம் பிடிப்பதால் தொகுதி உடன்பாடுஏற்படுவதில் சிக்கல் எழுந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+