25 பெண்களுக்கு சீட்: 20 பேர் புதுமுகங்கள்!
சென்னை:
முதல்வர் ஜெயலலிதா இன்று வெளியிட்ட அதிமுக வேட்பாளர் பட்டியலில் 25பெண்களுக்கு இடம் கிடைத்துள்ளது.
இதில் 20 பெண் வேட்பாளர்கள் புதுமுகங்கள் ஆவர்.ஜெயலலிதா, காஞ்சிபுரம் மைதிலி திருநாவுக்கரசு, அமைச்சர்கள் பா.வளர்மதி,விஜயலட்சமி பழனிச்சாமி, பாமகவிலிருந்து தாவி அதிமுக சார்பில் போட்டியிடும்சிவகாமி வின்சென்ட் ஆகியோர் மட்டுமே பழைய முகங்கள் ஆவர்.
நாடாளுமன்றத் தேர்தலில் தென் சென்னை தொகுதியில் போட்டியிட்டுத்தோல்வியைத் தழுவிய முதல்வர் ஜெயலலிதாவின் பள்ளித் தோழி பதர் சையீதிற்குசட்டசபைத் தேர்தலில் சீட் தரப்பட்டுள்ளது.
அவர் திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிடுகிறார். இத்தொகுதியில் கருணாநிதிபோட்டியிடக் கூடும் என பேச்சு உள்ளது நினைவிருக்கலாம்.
தென் சென்னை மாவட்ட அதிமுக செயலாளர் ஆதி ராஜாராம், ஆயிரம் விளக்குதொகுதியில் திமுக துணைப் பொதுச் செயலாளர் ஸ்டாலினை எதிர்த்துப்போட்டியிடுகிறார்.
அதிமுக வேட்பாளர் பட்டியலில் பெரும்பாலும் புதுமுகங்களே இடம் பெற்றுள்ளனர்.












Click it and Unblock the Notifications