29ம் தேதி கார்த்திக் கட்சி வேட்பாளர் பட்டியல்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் வேட்பாளர் பட்டியல் 29ம் தேதிவெளியிடப்படும் என அக்கட்சியின் தலைவர் கார்த்திக் அறிவித்துள்ளார்.
அதிமுக கூட்டணிக்காக பிரம்மப் பிரயத்தனம் செய்து பார்த்தும் முடியாமல்போனதால் கடுப்படைந்த கார்த்திக் தனது கட்சி 111 தொகுதிகளில் போட்டியிடும் எனஅறிவித்தார்.அவரது அறிவிப்பைத் தொடர்ந்து கட்சியினரிடமிருந்து விருப்ப மனுக்கள்பெறப்பட்டன.
இவ்வாறு விருப்ப மனு கொடுத்தவர்களிடம் கார்த்திக் நேர்காணல் நடத்தி வருகிறார்.இதில் 150க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.
நேர்காணலைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் கார்த்திக் பேசுகையில், இன்றுநேர்காணல் முடியும். அதன் பின்னர் அகில இந்திய பொதுச் செயலாளர் பிஸ்வாஸ்28ம் தேதி சென்னை வருகிறார்.
அவருடன் ஆலோசனை நடத்திய பிறகு 29ம் தேதி வேட்பாளர் பட்டியலைவெளியிடுகிறோம்.
நான் தேர்தலில் போட்டியிடுகிறேனா என்பது குறித்து வேட்பாளர் பட்டியல்வரும்போது தெரிந்து கொள்ளுங்கள் என்றார் கார்த்திக்.












Click it and Unblock the Notifications