புதியவர்களுக்கே அதிக வாய்ப்பு: கருணாநிதி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

திமுகவின் வேட்பாளர் தேர்வில் புதியவர்களுக்கும்,பெண்களுக்கும் அதிக வாய்ப்பளிக்கப்படும் என கருணாநிதிகூறியுள்ளார்.

தொகுதி பட்டியல் வெளியிட்டுக்கே பிரச்சனை செய்ததொண்டர்கள், வேட்பாளர் பட்டியலை வெளியிடும்போதுஇன்னும் பிரச்னையை கிளப்புவார்கள் என கருதும் திமுகதலைவர் கருணாநிதி உடன் பிறப்புகளுக்கு உருக்கமானவேண்டுகோளும் விடுத்துள்ளார்.

அவரது அறிக்கை விவரம்:

7,000க்கும் மேற்பட்ட கழகக் கண்மணிகள் அறிவாலயத்தில்என்னையும் நிர்வாகிகளையும் காலையிலிருந்து இரவு வரைசந்தித்துள்ளனர்.

நேர்காணலின் போது வேட்பாளர்களை பற்றி அவ்வப்போதுஎடுத்துக்கொள்ளப்பட்ட குறிப்புகள், அவர்களுக்கு செய்யப்பட்டபறிந்துரைகள் பற்றிய குறிப்புகள் என்னிடம் பத்திரமாக உள்ளன.

அப்படி குறித்துக்கொள்ளப்பட்ட பெயர்களில் எந்தப் பெயர்தலைமைக்கழகம் வெளியிடப்படும் பட்டியலில் இடம்

பெருகிறதோ?அவற்றில் தனது பெயரும் இணைந்திருக்குமோ என்ற ஆவல்ததும்ப அண்ணா அறிவாலயத்தில் அணி வகுத்திருப்போரைகாணுபோதெல்லாம் கசிந்துருகிறது என் நெஞ்சம்.

பட்டியலில் அவர் பெயர் இருக்கிறது என்றால் அவரைகாணும்போது எனக்கோர் ஆறுதல் கலந்த அக மகிழ்ச்சி. அணுஅளவினதாக. அந்தோ!, இவர் பெயர் பட்டியலில் இல்லையேஎன்று அறியும் நிலையில் அந்த அணுவானது, குண்டாகவே மாறிஎன் நெஞ்சுக்குள் வெடிப்பது போன்ற வேதனை.

பொதுவாக புதியவர்களுக்கும், சிறப்பாக மகளிர்க்கும்தொகுதிகளில் நிற்பதற்கான வாய்ப்பளிக்கும் எண்ணத்துடன்வேட்பாளர் பட்டியலை தயாரிக்க இருக்கிறேன்.

தேர்தல் விதிமீறல் பற்றி தமிழக தேர்தல் ஆணையமும், இந்தியதேர்தல் ஆணையமும் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை.எங்கே தேர்தல் விதிமீறல் நடந்தாலும், அதிகார துஷ்பிரயோகம்நடந்தாலும் அதை அச்சம் இன்றி தடுத்து நிறுத்த வேண்டும்.

வாக்காளர்களை வீடு வீடாக சென்று உடன் பிறப்புக்கள்இப்போதே சந்திக்க வேண்டும்.

இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார் கருணாநிதி.

அதிமுகவில் மட்டுமே கடைநிலை தொண்டனுக்கும்எம்எல்ஏவாகவோ, அமைச்சராகவோ வாய்ப்பு கிடைக்கிறது.ஆனால் திமுகவில் வாரிசு அரசியல் தான் காலம்காலமாக நடந்துவருகிறது என திமுக தொணடர்கள் பலர் நேரடியாவே புலம்பதுவங்கியுள்ளனர்.

இந்நிலையில் புதியவர்களுக்கு வாய்ப்பு அளிப்போம் எனகருணாநிதி கூறியிருப்பது தொண்டர்களிடையே பெரும்எதிர்பார்ப்பை துண்டியுள்ளது. உடன்பிறப்புகளின் உண்மையானபுலம்பல் தலைமைக்கு இப்போதாவது எட்டியதே...

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+