பொது தொகுதியிலும் தலித் வேட்பாளர்கள்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள பொதுத் தொகுதிகளிலும் சிலதலித் வேட்பாளர்கள் நிறுத்தப்படுவர் என்று அக்கட்சியின் மாநிலச் செயலாளர்வரதராஜன் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 13தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் தனித் தொகுதிகளும் அடங்கும். அதுதவிரபொதுத் தொகுதிகளிலும் சில தலித் வேட்பாளர்களை நிறுத்துவோம்.3 தொகுதிகளில் பெண் வேட்பாளர்கள் நிறுத்தப்படுவர். தேர்தல் அறிக்கை தயாராகிவருகிறது. வருகிற 29ம் தேதி நிர்வாகக் குழுக் கூட்டம் நடைபெறுகிறது.
30ம் தேதி வேட்பாளர் பட்டியலும், தேர்தல் அறிக்கையும் வெளியிடப்படும் என்றார்வரதராஜன்.












Click it and Unblock the Notifications