ராம நவமியன்று பாஜக வேட்பாளர் பட்டியல்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

ராம நவமி தினமான ஏப்ரல் 7ம் தேதி பாரதீய ஜனதா கட்சியின் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என அக்கட்சியின் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு கூறியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,

தமிழகத்தில் கூட்டணி பற்றி ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியம் சுவாமி மற்றும் சிறுபான்மைஅமைப்புகளுடன் பேச்சு நடத்தி வருகிறோம். அனைத்து தொகுதியிலம் தனித்து போட்டியிடவே விரும்புகிறோம்.

ஜனதா கட்சியுடன் கொள்கை ரீதியில் நாங்கள் ஒத்துப் போயுள்ளோம். தமிழகத்தில் அவர்களுடன் இணைந்துபோட்டியிடுவது குறித்து மத்திய தேர்தல் குழு தான் இறுதி முடிவெடுக்கும்.

47 சிறுபான்மையின அமைப்புகள் பாரதீய ஜனதாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. எங்கள் கட்சியின் நான்குபேர் கொண்ட குழு அமைத்து இந்த அமைப்புகளுடன் பேச்சு நடத்தி வருகிறது.

பாரதிய ஜனதா சார்பில் போட்டியிட இதுவரை 1"018 பேர் விண்ணப்பம் அளித்துள்ளனர். அவர்களிடம்நேர்காணல் நடந்து வருகிறது.

மாநில தேர்தல் குழு மூலம் ஏப்ரல் 2ம் தேதி வேட்பாளர் பட்டியல் இறுதி செய்யப்பட்டு ஏப்ரல் 4ல் மத்தியதேர்தல் குழுவிடம் ஒப்படைக்கப்படும். 234 தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்களை மத்திய தேர்தல்குழு முடிவு செய்யும்.

ராம நவமி நாளான ஏப்ரல் 7 அல்லது 8ம் தேதி பாரதிய ஜனதா வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். இரண்டுதிராவிட கட்சிகளின் ஆட்சியை மக்கள் பார்த்து விட்டார்கள். தமிழக மக்களுக்கு மாற்றத்தையேவிரும்புகிறார்கள். பாரதிய ஜனதா வரும் தேர்தலில் பெரும் சவாலை சந்திக்கவுள்ளது.

காங்கிரஸ் தமிழகத்தில் காமராஜ் ஆட்சியை அமைப்போம் என்று சொல்லி வருகிறது. ஆனால் நாங்கள்ராமராஜ்ஜியத்தை அமைக்க விரும்புகிறோம். தமிழக தேர்தல் செலவுக்குகாக ரூ. 2 கோடி ஒதுக்ககப்படும்என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+