பாமகவால் விரலை வெட்டிய திமுக தொண்டர்!

Subscribe to Oneindia Tamil

தஞ்சாவூர்:

தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் தொகுதியை பாமகவுக்கு ஒதுக்கியதால்அதிருப்தி அடைந்த திமுக தொண்டர் ஒருவர் தனது விரலை வெட்டி கட்சிக்குஎதிர்ப்பைத் தெரிவித்துள்ளார்.

திருவிடைமருதூர் மீண்டும் திமுகவுக்கே கிடைக்கும் என அக்கட்சியினர் பெருமஎதிர்பார்ப்பில் இருந்தனர். ஆனால் தொகுதியை பாமகவுக்கு ஒதுக்கியதால் திமுகவில்ஒரு பிரிவினர் அதிருப்தி அடைந்துள்ளனர்.

திமுக தலைமையை எதிர்த்து கொடிக்கம்பம் வெட்டிச் சாய்க்கப்பட்டது. கொடிகளும்எரிக்கப்பட்டன. நூற்றுக்கணக்கான கிளைகள் கலைக்கப்பட்டன.

கட்சியினரின் இந்தப் போக்கை திஐக தலைவர் கருணாநிதி அறிக்கை மூலம்கண்டித்தார். ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என பொதுச் செயலாளர் அன்பழகன்எச்சரிக்கை விடுத்தார்.

இந் நிலையில், திருவிடைமருதூர் தொகுதியைச் சேர்ந்த ஜெயராமன் என்ற தீவிரதிமுக தொண்டர் தனது ஆள்காட்டி விரலைத் துண்டித்து கட்சிக்கு தனது எதிர்ப்பைவெளிப்படுத்தியுள்ளார்.

அவர் கூறுகையில், முன்னாள் எம்.எல்.ஏ. ராமலிங்கத்திற்கே மீண்டும் சீட் கிடைக்கும்என எதிர்பார்த்திருந்தோம். ஆனால் இந்தத் தொகுதியில் எந்தவித ஆதரவும் இல்லாதபாமகவுக்கு தொகுதி ஒதுக்கப்பட்டது வேதனை தருகிறது.

திமுக சின்னத்திற்கு ஓட்டுப் போ முடியாத நிலை ஏற்பட்டு விட்டதால், எந்த விரலைக்கொண்டு வாக்களிக்க வேண்டுமோ, அந்த ஆள்காட்டி விரலே தேவையில்லைஎன்றுதான் விரலை வெட்டிக் கொண்டேன் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+