ஜெவை திட்டாதீர்: கருணாநிதி அட்வைஸ்!

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தேர்தல் பிரசார மேடைகளில் எந்தத் தலைவரையும் தனிப்பட்ட முறையில்விமர்சித்தும், திட்டியும் பேசாமல் அதிமுக அரசின் மக்கள் விரோதத் திட்டங்களைஅம்பலப்படுத்திப் பேச வேண்டும் என்று திமுக பேச்சாளர்களுக்கு அக்கட்சியின்தலைவர் கருணாநிதி அறிவுரை கூறியுள்ளார்.

தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் எப்படிப் பேச வேண்டும் என்பது குறித்து கருணாநிதிஇன்று அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைமைக் கழக பேச்சாளர்களிடையேபேசினார்.

இந்தக் கூட்டத்தில் ஸ்டாலின், பரிதி இளம்வழுதி, துரைமுருகன் உள்ளிட்ட பல்வேறுதலைவர்கள் கலந்து கொண்டனர். 200க்கும் மேற்பட்ட பேச்சாளர்கள் பங்கேற்றனர்.

அவர்களிடையே கருணாநிதி பேசுகையில், இந்த ஆட்சியின் அவலங்களைமக்களிடம் எடுத்துக் கூறி பேசுங்கள். ஜெயலலிதாவையோ, வைகோவையோவிமர்சித்தும், திட்டியும் பேசுவதைத் தவிருங்கள்.

கடந்த ஐந்து ஆண்டுகளில் மக்கள் சந்தித்த பிரச்சினைகள், அடைந்த வேதனைகள்,அதிமுக ஆட்சியின் சர்வாதிகாரம், விலை வாசி உயர்வு, விவசாயிகள்,தொழிலாளர்கள், நெசவாளர்கள், அரசு ஊழியர்கள் ஆகியோர் சந்தித்தகொடுமைகளை விளக்கிப் பேச வேண்டும்.

ஆவேசமாகவோ, கீழ்த்தரமாகவோ பேசுவதால் ஒரு பயனும் கிடையாது. நமக்குவெற்றிதான் முக்கிய குறிக்கோள்.

எனவே மக்களின் கவனம் திசை திரும்பும் வகையில், தனிப்பட்ட விமர்சனங்களுக்குஇடம் கொடுக்காமல், ஐந்து ஆண்டு கால அதிக ஆட்சியின் மக்கள் விரோதப்போக்கை எடுத்துக் காட்டி பேச வேண்டும் என்றார் கருணாநிதி.

கூட்டத்தில் கலந்து கொண்ட பேச்சாளர்களுக்கு என்ன என்ன பாயிண்டுகளை எடுத்துவைத்துப் பேசவேண்டும் என்பது குறித்த துண்டு பிரசுரங்களும் வழங்கப்பட்டன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+