சமாஜ்வாடி கட்சி 50 தொகுதிகளில் போட்டி!
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழக சமாஜ்வாடிக் கட்சி வருகிற சட்டசபைத் தேர்தலில் 50 தொகுதிகளில் தனித்துப்போட்டியிடப் போவதாக அக்கட்சியின் தலைவரும், இந்தியன் வங்கியின் முன்னாள்தலைவருமான எம்.கோபாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், எங்களுக்கு பிற்பட்டவகுப்பைச் சேர்ந்த ஐம்பது அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன.தமிழகத்தில் காங்கிரஸ், பாஜகவுக்கு மாற்றான தேசிய கட்சியாக சமாஜ்வாடி கட்சிவிளங்குகிறது.
மக்கள் விரும்பும் ஆட்சி மாற்றத்தை எங்களால் தர முடியும். எனவேதான் 50தொகுதிகளில் தனித்துப் போட்டியிடுகிறோம்.
தேர்தலில் போட்டியிட விரும்புகிறவர்களிடமிருந்து மனுக்கள பெறவுள்ளோம்.வேட்பாளர் அறிமுக நிகழ்ச்சிக்கு முலாயம் சிங்கை அழைத்துள்ளோம் என்றார்கோபாலகிருஷ்ணன்.












Click it and Unblock the Notifications