காளிமுத்து, 4 அதிமுக வேட்பாளர்கள் திடீர் மாற்றம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை:

அதிமுக அவைத் தலைவர் காளிமுத்து உள்ளிட்ட 5 அதிமுக வேட்பாளர்கள்மாற்றப்பட்டுள்ளனர். உடல் நலக்குறைவு காரணமாக காளிமுத்து போட்டியிலிருந்துவிலக்கப்பட்டுள்ளதாக அதிமுக தலைமை கூறியுள்ளது.

சமீபத்தில் உடல் நலம் பாதிக்கப்பட்ட அதிமுக அவைத் தலைவர் காளிமுத்து,தொடர்ந்து ஓய்வில் இருந்து வருகிறார். இந் நிலையில் அவர் மதுரை மத்திய தொகுதிவேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

நேற்று அதிமுக தலைமைக் கழகத்தில் நடந்த தேர்தல் அறிக்கை வெளியீட்டுநிகழ்ச்சியிலும் அவர் கலந்து கொண்டார். மேடையில் ஜெயலலிதாவுடன் காளிமுத்துமட்டுமே அமர்ந்திருந்தார்.

இந் நிலையில் காளிமுத்து உள்ளிட்ட நான்கு தமிழக அதிமுக வேட்பாளர்களையும்மற்றும் பாண்டிச்சேரி ஊசுடு தொகுதி அதிமுக வேட்பாளரையும் மாற்றியுள்ளார்ஜெயலலிதா.

மதுரை மத்திய தொகுதிக்கு காளிமுத்துவுக்குப் பதில் அண்ணா தொழிற்சங்க பேரவைசெயலாளர் எஸ்.டி.கே.ஜக்கையன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

பேரூர் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்த கே.பி.ராஜு நீக்கப்பட்டுஎஸ்.பி.வேலுமணி நிறுத்தப்பட்டுள்ளார்.

அந்தியூர் (தனி) தொகுதி வேட்பாளராக செல்வி துரைசாமிக்குப் பதில் சுப்பிரமணியம்அறிவிக்கப்பட்டுள்ளார்.

போடி நாயக்கனூர் வேட்பாளராக பரமசிவத்திற்குப் பதில் பார்த்திபன்போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுவை ஊசுடு தொகுதியில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்த உதவி சப்இன்ஸ்பெக்டர் செல்வராஜ் நீக்கப்பட்டு அவருக்குப் பதில் அரசி என்பவர்வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

இந்த வேட்பாளர்களுக்கு எதிராக அந்தந்தத் தொகுதிகளில் இருந்து கட்சித்தலைமைக்கு ஏராளமான புகார்களும், இவர்களை மாற்றக் கோரி ஆயிரக்கணக்கானதந்திகளும் பேக்ஸ்களும் போயஸ் கார்டனுக்கும் அதிமுக தலைமைஅலுவலகத்துக்கும் வந்து குவிந்ததால் இந்த 4 பேரும் மாற்றப்பட்டுள்ளனர்.

வழக்கமாக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுவிட்டால் அவர்கள்மாற்றப்படுவதில்லை. இதிலும் புரட்சி செய்துள்ளது அதிமுக.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+