2 நாட்களில் காங். வேட்பாளர் பட்டியல்!
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
இன்னும் இரண்டு நாட்களில் தமிழக காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் பட்டியல்தயாராகி விடும் என காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஆஸ்கர் பெர்னாண்டஸ்தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபைத் தேர்தலில் போட்டியிடும் 48 வேட்பாளர்களைத் தேர்வுசெய்வதற்காக கட்சியின் மத்திய தேர்தல் குழு இன்று டெல்லியில் உள்ள காங்கிரஸ்தலைமை அலுவலகத்தில் கூடி விவாதித்தது.இக்கூட்டத்தில் தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் வீரப்ப மொய்லி, பொதுச் செயலாளர்ஆஸ்கர் பெர்னாண்டஸ் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்திற்குப் பின் பெர்னாண்டஸ் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
கிட்டத்தட்ட ஆலோசனையை முடித்து விட்டோம். மீண்டும் வெள்ளிக்கிழமை கூடிவிவாதிக்கவுள்ளோம். அப்போது வேட்பாளர் பட்டியல் இறுதி செய்யப்பட்டு விடும்.
வேட்பாளர் தேர்வு தொடர்பாக கட்சித் தலைவர் சோனியா காந்தியுடன் ஏற்கனவேஆலோசனை நடத்தியுள்ளோம். 2 நாட்களில் வேட்பாளர் பட்டியல் தயாராகி விடும்என்றார்.












Click it and Unblock the Notifications