ஜெ முதல்வர்-விஜய்காந்த் அமைச்சர்!: நம்பலாமா நாராயணனை?
சென்னை:
ஜெயலலிதாதான் மீண்டும் முதல்வர் பதவிக்கு வருவார் என்று பிரபல ஜோதிடர்நம்புங்கள் நாராயணன் கூறியுள்ளார்.
தேர்தல் காலங்களில் ஜோதிடர்களுக்குத்தான் லக்கி பிரைஸ். அடுத்து பிரதமர் யார்,அடுத்த தல்வர் யார் என்றரீதியில் ஏகப்பட்ட கணிப்புகளை எடுத்து விடுவார்கள்.குருட்டாம்போக்கில் இவர்கள் சொல்வது சில நேரங்களில் பலித்து விடுவம் உண்டு.அப்படி பலித்து விட்டால் அடுத்த தேர்தலின்போது அந்த ஜோதிடர்களுக்கு படுகிராக்கி ஏற்பட்டு விடும்.
அந்த வகையில பிரபல ஜோதிடர் நம்புங்கள் நாராயணன் ஒரு கணிப்பை இப்போதுவெளியிட்டுள்ளார்.
தமிழக சட்டசபைத் தேர்தலில் யார் வீழ்வார், யார் வெல்வார் என்பதிலிருந்து ரஜினி,கமல் எதிர்காலம் வரை ஏகப்பட்ட விஷயங்களைக் கூறியுள்ளார் நாராயணன்.
எண் கணித அடிப்படையில் தனது முடிவுகளை கணித்துள்ளாராம் நாராயணன்.தலைவர்களின் பெயர், ராசியை வைத்து நாராயணன் கணித்துள்ளதன் அடிப்படையிலதெரிவித்துள்ள முடிவுகள்:
சட்டசபைத் தேர்தலில் ஜெயலலிதாவுக்கு மிகப் பெரிய வெற்றி கிடைக்கும். அதாவது4ல் 3 பங்கு மெஜாரிட்டியுடன் அவர் மீண்டும் ஆட்சியைப் பிடிப்பார்.
கடந்த காலங்களைப் போல் இல்லாமல், மத்திய அரசுடன் அவர் சுமூக உறவைஏற்படுத்திக் கொள்வார். பல திட்டங்களை செயல்படுத்துவார். அவரது ஆட்சியில்விவசாயம், கம்ப்யூட்டர் துறை மற்றும் தொழில் வளர்ச்சி மேம்படும்.
அதிமுக ஆட்சிக்கு வைகோ முழுமையாக ஒத்துழைப்பார். வேறு அணிக்கு மாறமாட்டார். ஆட்சி சிறப்பாக நடக்க முடிந்தவரை பாடுபடுவார்.
திமுக தலைவர் கருணாநிதிககு இது சோதனையான நேரம். தேர்தலில் பெரும்பின்னடைவை அவர் சந்திப்பார்.
விஜயகாந்த்தின் கட்சிக்கு நல்ல வெற்றி வாய்ப்பு உள்ளது. தனித்துப்போட்டியிடுவதாக அவர் கூறி வந்தாலும் கூட அதிமுகவுக்கு ஆதரவு தெரிவிக்கும்நிலையை அவர் எடுப்பார். அமைச்சராகும் யோகமும் அவருக்கு உள்ளது.
நடிகர் ரஜினியைப் பொருத்தவரை திரையுலகில் அவர்தான் உச்சத்தில் இருப்பார்.அவரது சிவாஜி படம் மிகப் பெரும் வெற்றியைப் பெறும். அரசியல் பக்கம் வரவேமாட்டார். தத்துவ வாழ்க்கையில் அவர் தன்னை ஈடுபடுத்திக் கொள்வார்.
நடிகர் கமல்ஹாசனுக்கும் இந்த ஆண்டு மிகச் சிறந்த ஆண்டாக அமையும். ரஜினிக்குஇணையான புகழை அவர் விரைவில் பெறுவார். அவருக்கு இருந்து வந்தகெட்டகாலம் முடிந்து விட்டது.
மிகப் பெரிய நிறுவனத்தின் படத்தில் அவர் நடிக்க ஒப்பந்தமாவார். அந்தப் படம்மிகப் பெரிய வெற்றியைப் பெறும்.
விரைவில் ஜோதிகா திருமண செய்தி வெளிவரும். அவர் நடிக்கும் படங்கள்அனைத்தும் சூப்பர் ஹிட் படங்களாக அமையும் என்று கூறியுள்ளார் நாராயணன்.












Click it and Unblock the Notifications