கருணாநிதியின் 10 கட்டளைகள் !

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் எப்படிப் பேச வேண்டும் என்பது தொடர்பாக 10முக்கிய பாயிண்டுகளை, பத்து கட்டளைகளாக திமுக பேச்சாளர்களுக்குக்கொடுத்துள்ளார் கருணாநிதி.

திமுக தலைவர் கருணாநிதியின் அந்த பத்து கட்டளைகள்:

- அதிமுக வெற்றி பெற்றால் ஜெயலலிதாவின் சர்வாதிகார ஆட்சி மீண்டும் அமைந்துவிடும் என்பதை மக்களிடம் தெளிவாக விளக்குங்கள்.

- அதிமுக ஆட்சியால் குறிப்பிட்ட சிலருக்கே பலன்கள் கிடைத்தன.பெரும்பான்மையான சமூகத்தினர் அதிக ஆட்சியில் ஒடுக்கப்பட்டனர்,நசுக்கப்பட்டனர், ஒதுக்கப்பட்டனர் என்பதை விளக்குங்கள்.

- விலை வாசி உயர்வு, ஊரகப் பகுதிகள், நகர்ப்புறக் குடிசைப் பகுதிகள் முற்றிலும்புறக்கணிக்கப்பட்டுள்ளதை எடுத்துக் கூறுங்கள்.

- கடந்த ஐந்து ஆண்டுகளில் புதிதாக எந்தத் தொழிற்சாலையும்தொடங்கப்படவில்லை. ஆனால் திமுக கூட்டணிக் கட்சிகள் இடம்பெற்றுள்ள மத்தியஆட்சியில்தான் சேது சமுத்திரத் திட்டம், சாலை மேம்பாட்டுத் திட்டங்கள், நோகியாநிறுவனம் உள்ளிட்டவை தமிழகத்திற்குக் கிடைத்தன.

- தலைமைச் செயலகத்தை விட்டு வெளியே வந்து ஜெயலலிதா எப்போதுமேமக்களை சந்திப்பதில்லை. மக்களாலும் அவரை எளிதில் சந்திக்க முடிவதில்லைஎன்பதை விவரித்துப் பேசுங்கள்.

- சென்னை மழை நிவாரண நெருக்கடியில் சிக்கி பலியானவர்கள் குறித்து விரிவாகப்பேசுங்கள். வெள்ள நிவாரண முறைகேடுகள் குறித்து விளக்கமாக பேசுங்கள்.

- மது விற்பனையில் தமிழகம் நம்பர் ஒன் என்ற சாதனையை பெரிதுபடுத்திப்பேசுங்கள், குறிப்பாக பெண்களிடம் இதை விளக்குங்கள்.

- கல்வி, வேலைவாய்ப்பு, வறுமை ஒழிப்பு ஆகிய அரசின் மூன்றுகடமைகளிலிருந்தும் ஜெயலலிதா அரசு தவறி விட்டதை, தோல்வியுற்று விட்டதைஎடுத்துக் காட்டி பேசுங்கள்.

- ரேஷன் பொருள் வினியோக முறைகேடுகள்.

- சென்னை நகர சாலைகளின் மோசமான நிலை ஆகியவை குறித்து விரிவாகப்பேசுங்கள் என்று பத்து பாயிண்டுகளை எடுத்துக் கொடுத்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+