பழனி அதிமுக வேட்பாளர் திமுக உறுப்பினரா?

Subscribe to Oneindia Tamil

சென்னை:

பழனி தனித் தொகுதியில் அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள தமிழரசிதிமுக உறுப்பினராக இருந்தவர் என அதிமுகவினர் குற்றம் சாட்டுகின்றனர்.

வழக்கமாகவே அதிமுகவில் பழனி தொகுதிக்கு மட்டும் யாரும் எதிர்பார்க்காதவகையில் வேட்பாளர்கள் அமைவது வழக்கம்.

கடந்த தேர்தலில் கூட யாருமே எதிர்பார்க்காத, அவ்வளவு பிரபலமே ஆகாதசின்னச்சாமி, வேட்பாளராக நிறுத்தப்பட்டார்.

தற்போதைய நிலையும் அதே கதிதான். யாரும் எதிர்பார்க்காத வகையில்நெய்க்காரப்பட்டி சிறப்பு பஞ்சாயத்து தலைவர் ஆர்.தமிழரசி, பழனி தொகுதிவேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

இது அதிமுக தொண்டர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழரசி2002ல் திமுக உறுப்பினராக இருந்துள்ளார் என அதிமுகவினர் குற்றம் சாட்டுகின்றனர்.

அதிமுக சார்பில் கடந்த 2001ல் நெய்க்காரப்பட்டி சிறப்பு பஞ்சாயத்து தலைவராகதமிழரசி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

நெய்க்காரப்பட்டியில் தமிழரசி திமுக உறுப்பினராக சேர்க்கப்பட்டுள்ளாதாகஅதிமுவினர் கூறுகின்றனர். இவரது திமுக உறுப்பினர் எண்: 84165. இவரது கணவர்ராமசாமி பெயரும் லிஸ்டில் உள்ளது.

தமிழரசி திமுகவில் உறுப்பினராக சேர்ந்ததற்கு திமுக தலைவர் கருணாநிதியும்,பொதுச் செயலாளர் அன்பழகனும் கையெழுத்து போட்டுள்ளதாக அதிமுகவினர்ஆதாரப்பூர்வமாக தகவல்களை அள்ளி வீசுகின்றனர்.

இதற்கான ஆதாரம் அதிமுகவினரிடம் பலமாக சிக்கியுள்ளதால் மாவட்ட செயலாளர்செல்லச்சாமி கோஷ்டியை சேர்ந்தவர்கள் தலைமைக்கு புகார் போடுவதில் மும்முரம்காட்டி வருகின்றனர்.

ஆனாலும் கடந்த 88ம் ஆண்டு முதல் அதிமுகவில் இருப்பதாக தமிழரசிஎல்லோரிடமும் தெரிவித்து வருகிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+